உயிரை பறிக்கும் ஷாப்பிங் மால் உணவுகள்! தமிழர்களே வாயை பிளந்துகொண்டு இந்த தவறுகளை இனியும் செய்யாதீர்கள்?
இப்போதெல்லாம் நமது வீட்டருகில் இருக்கும் அண்ணாச்சி கடைகளில், உழவர் சந்தைகளில் அல்லது ரோட்டில் தள்ளுவண்டியில் காய்கறிகள் வாங்குவதை விட கண்ணாடி சுவர்களால் அழகூட்டப்பட்டு குளிர் சாதன பெட்டிகளில் பல நாட்களாக உறங்கி கொண்டிருந்த காய்கறிகளை வாங்குவதில் தான் நமக்கு பெருமை மற்றும் கௌரவம் கருதுகிறோம்.
வானுயர்ந்து நிற்கும் ஷாப்பிங் மால்களில் வாயை பிளந்துகொண்டு அச்சடிக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை வாங்கி வருவதில் தான் நமது சந்தோஷம் இப்போது நிரம்பியுள்ளது.
உடல்நலத்திற்கு எது நல்லது எது கேட்டது என நாம் யோசிக்க தயாராய் இல்லை. ஒருவேளை அப்படி ஏதாவது ஏற்பட்டால் மருத்துவமனைக்கு செல்ல பக்காவாக மருத்துவ காப்பீடுகளோடு தயாராக இருக்கிறோம் என்பது தான் சோகமான உண்மை.
ஷாப்பிங் மால்களில் குளிர்சாதன பெட்டிகளில் உறைந்து போய் இருக்கும் பொருட்களை வாங்கி வந்து உண்பதனால், நமது உடலுக்கு எவ்வளவு கெடுதல்கள் ஏற்படுகிறது என உங்களுக்கு தெரியுமா?
பணக்காரர்களுக்கு வேண்டும் என்றால் அவ்வாறான உணவுகள் பொருத்தமாக இருக்கலாம். ஆனால், ஏழைகளுக்கு அது வேண்டாம். உயிரை நோயாக மாறி பறித்து விடும்.
நீரிழிவு நோய்
பெரும்பாலும் உறைய வைக்கப்பட்டிருக்கும் உணவுகளில் ஸ்டார்ச் எனும் மாவு பண்ட பொருள் சேர்க்கப்பட்டிருக்கும். இதனால் உங்களது உடலில் உள்ள இயற்கை சர்க்கரை அளவு அதிகரிக்கப்படுகிறது. இது உங்களுக்கு நீரிழிவு நோய் பாதிப்பை ஏற்படுத்த காரணமாய் இருக்கிறது.
பரம்பரை நோய் என்று சொல்லப்பட்டு வந்த நீரிழிவு நோய் சாதாரணமாய் அனைவருக்கும் வரும் நோயாகி இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
இதய நோய்கள்
உறைய வைக்கப்பட்டிருக்கும் உணவுகளில் ஹைட்ரஜனேற்ற கொழுப்பு இருக்கிறது. இது உடலுக்கு தீங்கான கொழுப்புச்சத்தை அதிகரிக்க செய்கிறது. இதன் காரணமாய் உங்கள் இதயத்தில் அடைப்பு ஏற்பட நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.
இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது
பொதுவாகவே உறைய வைக்கப்பட்டிருக்கும் உணவுகள் சீக்கிரமாக கெட்டுப் போகாமல் இருப்பதற்காக அதிக உப்பும், இனிப்பும் சேர்க்கப்பட்டிருக்கும். இதனால், உங்களது இரத்தக் கொதிப்பின் அளவு அதிகரிக்கும். இது உங்களுக்கு உயர் இரத்த அழுத்தத்தையும் ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
புற்றுநோய்
மற்றுமொரு அபாயமான பாதிப்பு என்னெவெனில், புற்றுநோய் பாதிப்பு! பதப்படுத்தப்பட்டு குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் இறைச்சி உணவுகளை பயன்படுத்துவதனால் கணைய புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருப்பதாய் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த முறையில் பாதுகாக்கப்படும் உணவுகளில்எ கொத்தமல்லி மற்றும் ஹார்ட் டாக் உணவுகள் 65 % புற்றுநோய்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
மற்ற பாதிப்புகள்
கெட்டுப் போகாமல் நீண்ட நாட்கள் இருக்க பலவகையான இரசாயனங்கள் உணவோடு சேர்க்கப்படுகிறது இதன் காரணத்தினால், நெஞ்சு வலி, தலை வலி, மயக்கம், குமட்டல், புரை. இதுப்போன்ற உணவுகளை அதிகம் பயன்படுத்துவதனால் சுவாச பிரச்சனைகள் கூட ஏற்படுகிறது.