சமையலுக்கு இந்த எண்ணெய்களில் ஒன்றை கூட பயன்படுத்தாதீங்க! மீறினால் அபாயம் நிச்சயம்! ஆராய்ச்சியில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

Report
958Shares

சாப்பாடு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. கச்சிதமான உப்பு, காரம், மசாலாக்கள் சேர்த்து சமைத்த உணவை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

சாப்பாடு என்றால் வாயை பிளக்கும் பல நண்பர்கள் நம்முடனே இன்றும் சுற்றி திரிவதுண்டு. உணவின் மீது இத்தனை காதல் இருப்பது தவறில்லை.

ஆனால், சாப்பிட கூடிய உணவு எத்தகைய தரம் கொண்டவையாக உள்ளது என்பது தான் மிக முக்கியமானது. கண்ட உணவுகளை கண்ட எண்ணெய்களில் தயாரித்து விற்றாலும் நாம் ருசிக்காக சாப்பிடுவதுண்டு.

இது பல்வேறு பாதிப்புகளை உடலுக்கு உண்டாக்கும். இதே நிலை பல சமயங்களில் நமது வீடுகளிலும் நடப்பதுண்டு. நாம் சாதாரணமாக நினைத்து கொண்டு பயன்படுத்தும் பல எண்ணெய்களில் பயங்கரமான ஆபத்துகள் உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எந்தெந்த எண்ணெய்களை சமையலுக்கு பயன்படுத்த கூடாது என்பதை இனி அறிந்து கொள்வோம்.

ஆராய்ச்சி!
சமைக்கும் எண்ணெய்களை பற்றிய ஆய்வில் தான் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, அன்றாடம் சமைக்கும் எண்ணெய்யின் ஊட்டசத்தை விட அதனால் ஏற்படும் பாதிப்பை தான் நாம் முதலில் கவனிக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இல்லையேல் நேரடியாக இவை இரத்தத்தையும், இதயத்தையும் தாக்கி, உயிருக்கே ஆபத்தை உண்டாக்கி விடுமாம்.
தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்யில் அதிக ஆரோக்கியங்கள் இருந்தாலும் இதில் நிறையுற்ற கொழுப்புகள் நிறையவே காணப்படுகிறது.

ஆதலால், இவை இதய பாதிப்பை உண்டாக்க கூடும் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, கொலஸ்ட்ரால் அதிகமாக உடலில் இருப்போர் இந்த எண்ணெய்யை தவிர்ப்பது நல்லது.

தாவர எண்ணெய்

நேரடியாக தாவரங்களில் இருந்து பெறப்படும் இந்த வகை எண்ணெய்கள் சமையலுக்கு உகந்தது அல்ல. இத தெரியாமல் நம்மில் பலர் சமையலுக்கு இதை பயன்படுத்தி வருகின்றோம். இது உணவை சுவை மிக்கதாக தருகின்றது என்பதற்காக நாம் இவ்வாறு செய்ய கூடாது.

பனைமர எண்ணெய்

மலிவான விலையில் கிடைக்கிறது என்பதற்காக இந்த எண்ணெய்யை ஒரு போதும் பயன்படுத்தி விடாதீர்கள். இது நேரடியாக இதயத்தை பாதித்து மாரடைப்பு, இதய நோய்கள் போன்றவற்றை பரிசாக வழங்கும் என அமெரிக்கன் ஹார்ட் அஸோஸியேஷன் கூறியுள்ளது. எனவே, பனைமர எண்ணெய்யை தவிர்ப்பது நல்லது.

நெய்

சிலர் வீடுகளில்எதற்கெடுத்தாலும் நெயை சமையலுக்கு பயன்படுத்தி கொள்வதுண்டு. இவ்வாறு செய்வது பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம். அத்துடன் கொலஸ்ட்ராலை அதிகரித்து, இதய நோய்களை உண்டாக்கும் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சரியானது எது?

மேற்சொன்ன எண்ணெய் வகைகளை தவிர்த்து விட்டு ஆலிவ் எண்ணெய், அவகேடோ எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றை சமையலுக்கு பயன்படுத்தலாம். இது உடல் ஆரோக்கியத்தை அதிகரிப்பதோடு, இதய நோய்களையும் தடுக்கும்.

37850 total views