ஊசிபோட்டு விக்கப்படும் இறால்! மக்களே ஜாக்கிரதையா வாங்குங்க... சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

Report
1282Shares

ஆர்கானிக் உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் ஒரு புறம் பரவி வருகிறது. மறுபுறம் விற்பனையாளர்கள் மக்களை ஏதாவது ஒரு ரூபத்தில் ஏமாற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.

இது போல் ஒரு வழக்கு தற்போது சீனாவில் நடந்துள்ளது.

இறால் வாங்கவரும் வாடிக்கையாளர்களுக்கு ஆரோக்கியமாகவும் சாறு நிறைந்ததாகவும் இறால் காணப்பட வேண்டும் என்று நினைத்து இந்த ஏமாற்று வேலை நிகழ்ந்துள்ளது.

இறாலை நன்றாக கவனித்துப் பார்த்தால் அதில் ஜெலட்டின் உட்செலுத்தப்பட்டது தெரிய வருகிறது.

இறாலில் ஜெலட்டின் நிரப்பப்பட்டிருப்பதை ஒரு பெண் கண்டுபிடித்துள்ளார்.

ஒரு பெண் கடையில் இருந்து வீட்டிற்கு இறால் வாங்கி வந்துள்ளார். அந்த இறாலின் தலையை உரிக்கும்போது அதில் ஜெலட்டின் நிரம்பி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இறாலில் ஜெல்லி போன்ற ஒரு கூறு காணப்படுவது சீனாவில் முதல்முறை அல்ல என்று பல அறிக்கைகள் கூறுகின்றன. குறிப்பாக 2012ம் ஆண்டு முதல் சீனாவின் பல்வேறு இடங்களில் இறாலில் இது போன்ற ஒரு கூறு காணப்படுவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பல்வேறு காரணங்களுக்காக இறாலில் ஜெலட்டின் உட்செலுத்தப்படுகிறது. இறாலை உலர்த்தி, காய வைத்து, பனி நீக்கம் செய்து, பிறகு அவை ஆரோக்கியமாகவும் புஷ்டியாகவும் காணப்படுவதற்காக வியாபாரிகள் இறாலுக்குள் ஜெலட்டினை ஊசி மூலம் உட்செலுத்துகின்றனர்.

இதனால் இறால் முன்பை விட புஷ்டியாக, ஆரோக்கியமாக வளமாக காணப்படுகிறது.

மேலும் இப்படி ஜெலட்டின் உட்செலுத்தப்ட்ட இறால்கள் முன்பை விட 20 முதல் 30 சதவிகிதம் கூடுதல் எடையுடன் விளங்குகிறது.

இதனால் வியாபாரிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கிறது.

ஒரே பயம்

  • இந்த வகை ஜெலட்டின் நிரப்பப்பட்ட இறால்கள் மனிதர்கள் உண்ணக் கூடியதாக இருக்குமா என்பது இதனை வாங்கி உண்ணும் வாடிக்கையாளர்களின் சந்தேகமாக உள்ளது.
  • இதற்குக் காரணம், மலிவான விலையில் தொழிற்சாலை பயன்பாட்டிற்காக கிடைக்கும் ஜெலட்டின் உட்கொள்வதால் தீங்கு ஏற்படும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

loading...