புற்றுநோய்க்கு இயற்கை மருந்து! ஒரு தடவை உணவில் கலந்து சாப்பிட்டாலே போதும்

Report
319Shares

நாம் சாப்பிட கூடிய உணவுகள் எல்லாவற்றிலும் ஊட்டச்சத்துக்கள் இருக்கும் என்பது நிச்சயமில்லை.

ஒரு சில உணவு பொருட்கள் மட்டுமே சத்துக்கள் கொண்டதாக இருக்கும். ஆனால், மற்றவை மிகவும் குறைந்த அளவிலே சத்துக்கள் கொண்டிருக்கும்.

குறிப்பாக வண்ணமயமான உணவு பொருட்கள் அனைத்துமே அதிக ஊட்டசத்துக்கள் கொண்டதாக உள்ளன. இவற்றை நாம் அதிக அளவில் சாப்பிட்டு வந்தால் பலவித நன்மைகள் நமக்கு கிடைக்கும்.

குடை மிளகாய் பல நிறங்களில் உள்ளன. இவற்றை சிலர் ஹைபிரிட் என்று நினைத்து கொள்கின்றனர். ஆனால், இது அப்படி கிடையாது.

இவை வளரும் போது ஒவ்வொரு கால கட்டத்திலும் மாற்றம் பெறும். குறிப்பாக ஆரம்ப நிலையில் பச்சையாகவும், அதன் பின் மஞ்சளாகவும், அதற்கு அடுத்த நிலையில் ஆரஞ்சாகவும், இறுதியில் செக்க சிவந்த நிறத்திலும் இது மாறும்.

பச்சை நிறம்

முழுமையாக பழமாக்குவதற்கு முன்பே குடை மிளகாயை அறுவடை செய்து கடைகளில் இந்த நிறத்தில் விற்கப்படுகின்றன. இவை சற்று கசப்பு தன்மை வந்ததாக இருக்கும். மேலும், பெரும்பாலும் நாம் இந்த வகை குடைமிளகாயை தான் பயன்படுத்துவோம். இதிலும் சத்துக்கள் உள்ளதுதான். ஆனால், இதை விட அதிக அளவில் சத்துக்கள் இன்னொரு நிறத்தில் உள்ளது.

மஞ்சள் பச்சை நிறம்

கொஞ்சம் பழுத்தால் மஞ்சளாக மாறி விடும். இது சற்று பழுத்திருப்பதால் சிறிது இனிப்பு சுவையை தரும். இந்த நிறத்தை உணவில் சேர்த்தால் உங்களின் பசியை அதிகரிக்கும். மேலும், உணவுகளை அழகாக காட்டவும் மஞ்சள் நிற பழங்கள் உதவுகின்றன.

ஆரஞ்சு

பச்சை, மஞ்சளை தொடர்ந்து களமிறங்கும் நிறம் ஆரஞ்சு தான். இந்த நிறத்தில் உள்ள குடை மிளகாய் அவ்வளவு சுவை கொண்டதாக இருக்காது எனவும், இதை உணவில் பயன்படுத்தினால் உணவின் ருசி மாறி விடவும் உணவு வல்லுநர்கள் கூறுகின்றனர். இதை விடவும் சத்து மிகுந்த நிறம் வேறு உள்ளது.

செக்க சிவந்த மிளகாய்!

மற்ற நிறங்களை காட்டிலும் சிவப்பு நிறத்தில், வெளிர் என்று உள்ள குடை மிளகாய் பல வித் நன்மைகள் கொண்டது. இதை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதால் உங்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும். இதில் வைட்டமின் சி, கேரட்டின், பைட்டோ கெமிக்கலை போன்றவை அதிக அளவில் உள்ளதால் சிவப்பு நிறம் சிறந்த நிறமாக உள்ளது.

புற்றுநோய் அபாயம்

உணவில் சிவப்பு நிற குடைமிளகாய் சேர்ப்பதால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை இது குறைக்கிறது. மேலும, இதய பாதிப்பு ஏற்படாமலும் பார்த்து கொள்ளும். எனவே, வாரத்திற்கு 1முறையாவது இதை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

11779 total views