மிகவும் விலைக்குறைவாக கிடைக்கும் நெல்லிக்காய்... ஏராளமான நன்மைகள் இதோ!

Report
111Shares

நெல்லிக்காய் இலை, காய், வற்றல் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை. வைட்டமின் ‘சி’ சத்து நிறைந்ததாக உள்ள நெல்லிக்கனிகள் பழ வகைகளுள் மிகவும் முக்கியமானவை.

  • நெல்லிக்காய் வற்றல், நெல்லிக்காய் ஊறுகாய் போன்றவை ஆரோக்கியம் தரும் உணவுப் பொருட்களாகும்.
  • நெல்லிக்காய் புளிப்பு, இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவைகளைக் கொண்டது. குளிர்ச்சித் தன்மையானது. கண்களுக்குக் குளிர்ச்சி தரும். செரிமானத்தைக் தூண்டும்.
  • சிறுநீர் பெருக்கும். குடல் வாயுவை அகற்றும். பேதியைத் தூண்டும். உடல்சூடு, எலும்புருக்கி நோய், பெரும்பாடு, வாந்தி, வெள்ளை, ஆண்குறிக் கொப்புளங்கள் போன்றவற்றைக் குணமாக்கும். நெல்லி வேர், நரம்புகளைச் சுருக்கும், வாந்தி, மலச்சிக்கல் ஆகியவற்றைக் குணமாக்கும்.
  • நெல்லிக்காய் வற்றல், குளிர்ச்சி தரும்; இருமல், சளி போன்றவற்றைக் குறைக்கும். உடலைப் பலப்படுத்தும். நெல்லிக்காய் தைலம் நாட்டு மருந்துக் கடைகளில் பரவலாக விற்பனை செய்யப்படுகின்றது. இதனைத் தலையில் தேய்த்துத் தலைமுழுகிவர கண்கள் பிரகாசமாக இருக்கும்; பொடுகு கட்டுப்படுவதுடன், முடி உதிர்தலும் தடுக்கப்படும்.
  • பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட நெல்லிக்காய் ஆயுளை அதிகரிக்க கூடியது. ஈரல், எலும்புகளுக்கு பலத்தை கொடுக்கும். சத்துக்கள் நிரம்பிய நெல்லிக்காயை பக்குவப்படுத்தி வைத்து கொண்டு பயன்படுத்துவதால் ஆரோக்கியம் ஏற்படும்.
  • நெல்லிக்காய் வேகவைத்து தயிரோடு சேர்த்து பச்சடியாக சாப்பிடும்போது, வயிற்று போக்கு, வெள்ளைபோக்கு பிரச்னைகள் சரியாகும். எனவே, எளிதில் கிடைக்க கூடிய நெல்லிக்காயை நாம் அடிக்கடி சாப்பிடுவது நல்லது.
  • நாள்பட்ட கழிச்சல், வயிற்றுபோக்கை குணப்படுத்தும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைக்கு அவல் அற்புதமான மருந்தாகிறது. அவலில் நீர்விட்டு வேகவைத்து உப்பு, புளிப்பில்லாத தயிர் சேர்த்து கலந்து சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, சீதக்கழிச்சல் ஆகியவை வெகு விரைவில் குணமாகும்.
  • நெல்லிக்காயை ஊறுகாய் போன்று தயாரித்து உணவில் சேர்த்துக்கொள்வதால் செரிமானம் சீராகும். கல்லீரல் பலப்படும். நெல்லிகாயை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் நோய் நம்மை நெருங்காது.

4117 total views