பூண்டுடன் ரெட் ஒயினை குடிப்பதால் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள்.. நிச்சயம் ஷாக் ஆவீங்க!

Report
206Shares

நம்ம உடம்புல நடக்குற பல்வேறு மாற்றங்களுக்கு முதல் காரணம் நாம் சாப்பிடுற சாப்பாடு தான். பழங்கள், காய்கறிகள், கீரைகள், நொறுக்கு தீனிகள்... இப்படி எதை சாப்பிட்டாலும் முதலில் தாக்கம் ஏற்படுவது உங்களின் உள்ளுறுப்புகள் தான். இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலும் நம்மை அச்சுறுத்தும் பாதிப்புகள் தொப்பை, உடல் எடை அதிகரிப்பு, கொலஸ்ரால், எதிர்ப்பு சக்தியின்மை போன்றவை தான்.

வயிற்றில் 2 டயர்களை கட்டி கொள்வது போன்று இருந்தால் அது தொப்பைக்கான பாதிப்பு. இதுவே உடல் முழுவதுமே சதைகளால் நம்மை சுற்றி கொண்டால் உடல் எடை கூடிவிட்டதற்கான தோற்றமாகும். இவை இரண்டையும் உடனே தீர்வும் கொண்டு வர பூண்டு மற்றும் ரெட் ஒயின் போதும்.

உங்களின் இந்த பிரச்சினையை இவை இரண்டையும் வைத்தே சரி செய்ய முடியும் என ஆய்வுகள் சொல்கின்றன. இதை எப்படி தயாரிப்பது என்றும். இதனால் ஏற்படுகின்ற மேலும் பல நன்மைகளையும் இந்த பதில் பார்க்கலாம்.

பூண்டும் ஒயினும்..!

இதுவரை இப்படி ஒரு கலவையை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது. ஏன், கேட்டிருக்க கூட முடியாது. வெறும் பூண்டு மற்றும் ரெட் ஒயினை சேர்க்கும் போது அவற்றிற்குள்ளே பல்வேறு மாற்றங்கள் உண்டாகும். இந்த மாற்றங்கள் தான் உடல் எடையை குறைப்பதோடு, எதிர்ப்பு சக்தியையும் கூட்டுகிறது.

கொலஸ்ட்ரால்

இந்த அருமருந்தை சாப்பிட்டு வருவதால் உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு குறையும். கூடவே இனி உங்களுக்கு இந்த டயரை போன்ற தொப்பை பிரச்சினை இருக்காது. மேலும், இதய நோய்கள் உருவாவதையும் தடுத்து விடலாம்.

தேவையான பொருட்கள்

உடலில் ஏராளமான மாற்றங்களை உண்டாக்க வேண்டுமென்றால் அதற்கு பூண்டும் ரெட் ஒயினும் அவசியம். இதை இங்கு கூறும் அளவில் முதலில் எடுத்து கொள்ளுங்கள்.

  • பூண்டு 12 பற்கள்
  • ரெட் ஒயின் அரை லிட்டர்
  • கண்ணாடி ஜார் 1
தயாரிப்பு முறை

முதலில் பூண்டின் தோலை நீக்கி சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும். பிறகு இதனை கண்ணாடி ஜாரில் போட்டு ரெட் ஒயினை சேர்க்கவும்.

இதன் மூடியை இறுக மூடி கொண்டு சூரிய ஒளி மிதமாக இருக்கும் இடத்தில் 2 வாரம் வைத்து கொள்ள வேண்டும். தினமும் இந்த ஜாரை குலுக்கி குலுக்கி வைக்கவும்.

பராமரிப்பு

இரண்டு வாரம் கழித்து இந்த கண்ணாடி ஜாரில் இருக்கின்ற ரெட் ஒயின் மற்றும் பூண்டின் கலவையை கண்ணாடி பாட்டிலுக்கு மாற்றவும். இப்போது இதனை சூரிய ஒளி படும் இடத்தில் வைப்பதற்கு பதிலாக ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும்.

சாப்பிடும் முறை

இந்த கலவையை ஒவ்வொரு நாளும் 3 முறை 1 ஸ்பூன் அளவிற்கு சாப்பிட்டு வரலாம். 1 மாத காலம் இப்படி சாப்பிட்டு வந்தால் இதனால் உண்டாகும் மாற்றங்களை நீங்களே கண்கூடாக பார்ப்பீர்கள். 1 மாதத்தில் 1 நாள் கூட இதை சாப்பிடாமல் இருக்க கூடாது என்பதை நினைவில் கொள்க!

நச்சுக்களை நீக்க

நீண்ட நாட்களாக உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த பூண்டு மற்றும் ஒயின் கலவை உதவுகிறது. சிறுநீரகம், பெருங்குடல் பகுதி, மேலும் சில முக்கிய உறுப்புகளில் சேர்ந்துள்ள அழுக்குகள் முழுவதையும் இது வெளியேற்றி விடும்.

புற்றுநோய்

இன்றைய உலகில் புற்றுநோய்களின் அபாயம் நம் எல்லோரையும் அச்சுறுத்துகிறது. இதன் கொடூர பார்வையில் இருந்து தப்பிக்க எளிய வழி இந்த ரெட் ஒயின் மற்றும் பூண்டு தான்.

இவற்றில் ஆன்டி பையோட்டிக், ஆன்டி ஆக்சிடன்ட், அத்துடன் புற்றுநோயையும் தடுக்கும் தன்மை இதற்குண்டு.

எதிர்ப்பு சக்தி

இந்த கலவையை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலமாக எதிர்ப்பு சக்தி குறைபாடு நீங்கும். உடலில் உள்ள அதிக உப்பை குறைத்து உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் தன்மை இதற்குண்டு. கூடவே இரத்த ஓட்டத்தையும் இந்த கலவை சீராக வைத்து கொள்ளும்.

8081 total views