தினமும் 2 தக்காளி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? அதி உச்ச மாற்றங்கள் ஏற்படும் படிங்க..?

Report
140Shares

சிவப்பு நிறத்தில் கண்ணை கவரும் தன்மை உடைய பழம் தக்காளி. அன்றாட உணவில் தக்காளியின் பங்கு அதிகமே.

இது ஒரு புறம் இருக்க அதன் மருத்துவ தன்மைக்கும் இதை நாம் உணவில் சேர்த்து வருகின்றோம் என்றே சொல்லலாம்.

தக்காளியில் பல்வேறு சத்துக்கள் உள்ளது. எப்படி வாழைப்பழம், திராட்சை, ஆப்பிள் முதலியவற்றை அன்றாடம் சாப்பிட்டு வருகின்றோமோ அதே போன்று தக்காளியையும் நாம் அன்றாடம் சாப்பிட்டு வர வேண்டும்.

ஆற்றல் மிக்கவை

தக்காளியின் முழு ஆரோக்கியத்திற்கும் அதில் உள்ள சத்துக்கள் தான் மூல காரணம். வைட்டமின் எ, பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் சி, பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் இதில் அதிக அளவில் உள்ளது. மற்றவைகளை காட்டிலும் நீர்சத்து தக்காளியில் அதிக சதவீகிதத்தில் உள்ளது.

இதய ஆரோக்கியம்

பலருக்கும் வர கூடிய பேராபத்தில் இதய நோய்களும் முக்கிய இடத்தில் உள்ளது. எதை சாப்பிட்டாலும் இதய பாதிப்பு, மாரடைப்பு, கொலஸ்ட்ரால் கூடுதல் போன்ற பிரச்சினைகள் உண்டாகுகின்றன. இவற்றில் இருந்து உங்களை காத்து கொள்ள தினமும் 2 தக்காளியை சாப்பிட்டு வந்தால் போதும். இந்த பலனை தருவது தக்காளியில் உள்ள பொட்டாசியம் தான்.

இரத்தமும் சர்க்கரையும்..!

லைகோபைன் என்கிற மூல பொருள் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. இந்த லைகோபைன் தக்காளியில் அதிக அளவில் உள்ளதால் மிக எளிதாக சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. கூடுதலாக இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாடுடன் வைத்து கொள்ளும்.

புற்றுநோய் அபாயமா..?

உடலில் சேர்ந்துள்ள நச்சுக்கள் கூட புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும். தினமும் 2 தக்காளியை சாப்பிட்டு வந்தால் மிக எளிதாக புற்றுநோயை தடுத்து விடுலாம். அத்துடன் புற்றுநோய் ஏற்படுத்த கூடிய அனைத்து காரணிகளையும் உடலில் இருந்து இது வெளியேற்றி விடும்.

5067 total views