இந்த உணவுகளை உடனே தூக்கி குப்பையில் எறியுங்கள்!.. இல்லை உயிருக்கு பேராபத்து?

Report
1221Shares

எந்த ஒரு உயிரினமாக இருந்தாலும் அதற்கென்று ஒரு காலாவதி திகதி இருக்கும்.

மனிதனின் தற்போதைய வாழ்நாள் 60- 70 என்கிற கணக்கில் இருப்பது போன்றே இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு பொருட்களுக்கும் காலாவதி திகதி உண்டு.

ஒரு சில பொருட்களை காலாவதி ஆன பின்னரும் நாம் சாப்பிடலாம். ஆனால், சில உணவுகளை அதன் காலாவதி திகதிக்கு பிறகு தொட்டால் கூட ஆபத்து நமக்கு தான்.

அப்படிப்பட்ட உணவுகளை அன்றாடம் நாம் சாப்பிட்டும் வருகின்றோம். பெரும்பாலும் சாப்பிட கூடிய காய்கறிகள், பழங்கள் போன்றவற்றிற்கு கூட தனிவிதமான காலாவதி திகதிகள் உண்டு.

இதனை அறியாமல் நாம் சாப்பிட்டு வருகின்றோம். இதனால் மரணம் கூட நேரலாம் என ஆய்வுகள் சொல்கின்றன. அந்த அளவிற்கு காலாவதியான உணவு பொருட்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

முட்டை

சில வீடுகளில் 1 மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கும் போது, அவற்றுடன் முட்டை போன்றவற்றையும் சேர்த்து வாங்கி விடுவர்.

அவ்வாறு வாங்குவது உங்களுக்கு தான் பேராபத்தை உண்டாக்குகிறதாம். முட்டை காலாவதி ஆகிவிட்டதா இல்லையா என்பதை அறியவும் எளிய வழி உள்ளது.

குளிர்ந்த நீரை 1 பாத்திரத்தில் எடுத்து கொள்ளுங்கள். பிறகு முட்டையை ஒன்று ஒன்றாக அதிலிடவும். இப்படி செய்யும்போது அந்த முட்டைகள் மூழ்கினால் காலாவதி ஆகவில்லை என்று அர்த்தம். இதுவே அவை மிதந்தால் காலாவதி ஆகிவிட்டது என்று அர்த்தமாம். எனவே, காலாவதி ஆகின முட்டையை சாப்பிட்டால் உடல் நல கோளாறுகள் நிச்சயம் உண்டாகும்.

சிப்ஸ்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் சிப்சை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். சில சிப்ஸ் பேக்கட்டுகளில் காலாவதி தேதிகள் குறிப்பிடுவது கிடையாது.

அவ்வாறு இருக்க இதில் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யின் தன்மை விஷமாக மாற வாய்ப்புகள் உண்டு. ஆதலால் ஒரு வித காலாவதி ஆகின வாடை ஏற்பட்டால் அதை தூக்கி போட்டு விடுங்கள்.

கீரை

அதிக சத்துக்கள் கொண்ட கீரை வகைகளுக்கும் தனி காலாவதி திகதி உண்டு. காலாவதி ஆன கீரைகளை சமைத்து உண்டால் அவற்றில் ஈ.கோலி என்கிற பாக்டீரியா வகை குடியேறி உங்களின் முழு ஆரோக்கியத்தையும் கெடுத்து விடும்.

எனவே கீரைகளை, வாங்கிய ஓரிரு நாட்களிலே சாப்பிட்டு விடுங்கள்.

34813 total views