உடல் எடையை குறைக்க தக்காளி மட்டுமே போதும்!! எப்படி சாப்பிட வேண்டும்?

Report
176Shares

தக்காளியில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான அயோடின், கந்தகம், மக்னீஷியம், பொட்டாசியம், சோடியம், இரும்பு சுண்ணாம்பு போன்ற சத்துக்களும், மேலும் வைட்டமின் சத்துக்களும் ஏராளமாய் அமைந்துள்ளன.

தக்காளிப் பழத்தை ஜூஸாகவும், சாலட் ஆகவும், சூடாக சூப்பாகவும் கடைகளில் நம்மால் வாங்க முடியும்.

நோய் எதிர்ப்பு சக்தி

தக்காளியில் வைட்டமின் சி வளமாக இருப்பதால், இதனை உணவில் சேர்த்து வர உடலின் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். தக்காளியிலுள்ள அஸ்கார்பிக் அமிலம் செல் அழிவை தடுப்பதுடன் சுண்ணாம்பு சத்தை நிலைநிறுத்துகின்றன.

தோல் நோய் நீங்க

நன்கு பழுத்த தக்காளி இரண்டு எடுத்து, சிறிது சிறிதாக அரிந்து, மிக்ஸியிலிட்டு, ஜூஸ் எடுத்து வெறும் வயிற்றில் காலையில் பருகி வந்தால் போதும், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தோல் மற்றும் விதைகளை நீக்கிவிடுவது நல்லது.

உடல் எடை குறைய

ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க தக்காளி பெரிதும் உதவுகிறது. உங்களுடைய டயட்டில் தக்காளி இருந்தால் கண்டிப்பாக உங்களால் உடல் எடையை குறைக்க முடியும். தக்காளியை தோல் மற்றும் விதையை நீக்கி சாறு தயாரித்து குடிப்பதால், அவை சிறுநீர் கிருமித்தொற்றை நீக்குகிறது.

உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டும் என விரும்புபவர்கள் தினமும் காலையில் இரண்டு தக்காளி பழங்களை எடுத்து சாறாக்கி தொடர்ந்து இரண்டு மாதங்கள் சாப்பிட்டு வந்தால் உடல் எடை வேகமாக குறைவதை காணலாம். இதற்கு முக்கியமான காரணம் தக்காளியில் மாவுச்சத்து குறைவாக இருப்பதே ஆகும். அதுமட்டுமல்லாமல் தக்காளியில் அதிக அளவில் வைட்டமின்களும் தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. இதனால் நமக்கு உடல் நலக் குறைவு சோர்வு ஏற்படாமல் நம்மால் உடல் எடையை குறைக்க முடியும்.

புற்றுநோய்

புரோஸ்டேட் புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் தக்காளிக்கு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தக்காளியில் அதுவும் சமைத்த தக்காளிக்கு புரோஸ்டேட் புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

6006 total views