வாழ்நாள் முழுவதும் புற்றுநோய் வராமல் தடுக்கும் அதிசய பழம்...

Report
2715Shares

பழங்கள் என்றாலே ஆரோக்கியமானவைதான் என்று நாம் அறிவோம். இந்த பரந்த பூமியில் இருக்கும் எண்ணற்ற ஆரோக்கியமான பழங்களை பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். அதேபோல பல ஆரோக்கியமான பழங்களை பற்றி நாம் தெரிந்து வைத்து கொள்ளாமல் இருக்கிறோம். அதில் முக்கியமான ஒரு பழம்தான் பெர்சிம்மன் பழம் என்னும் சீமை பனிச்சம்பழம்.

பூமியின் மிகவும் சுவையான பழங்களில் ஒன்று இந்த பெர்சிம்மன் பழம். இதனை பற்றி நமக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதில் அமெரிக்கன் பெர்சிம்மன், ஜப்பான் பெர்சிம்மன், இந்திய பெர்சிம்மன் மற்றும் கருப்பு பெர்சிம்மன் என்று பல வகைகள் உள்ளது. இந்த பழம் சுவையானது மட்டுமல்ல பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கக்கூடியது. இதன் மருத்துவ பலன்கள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

கண் ஆரோக்கியம்

கண்ணின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான வைட்டமின் ஏ பெர்சிம்மன் பழத்தில் அதிகம் உள்ளது. ஒருநாளுக்கு உங்கள் கண்ணின் ஆரோக்கியத்திற்கு தேவையான 55 சதவீதம் வைட்டமின் ஏ இந்த ஒரு பழத்தில் இருந்தே கிடைக்கும். வைட்டமின் ஏ குறைபாடு மாலைக்கண் நோய், கண் எரிச்சல் மற்றும் கண் தொடர்பான பல நோய்கள் ஏற்பட காரணமாய் அமைகிறது.

கொழுப்புகளை குறைக்கிறது

இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்பட முக்கிய காரணம் கொழுப்புதான். சில ஆய்வுகளின் படி, பெர்சிம்மன் பழம் சாப்பிடுவது உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. தினமும் இந்த பழம் சாப்பிடுவது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்றும்.

வயதாவதை தடுக்கும்

பீட்டா-கரோட்டின், லுடீன், லிகோபீன் மற்றும் கிரிப்டோக்ஸான்டின் போன்ற மதிப்புமிக்க ஊட்டச்சத்துக்கள் பெர்சிம்மனில் உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் ஆக்ஸிடேடிவ் அழுத்தத்தை குறைப்பதுடன் முன்கூட்டியே வயதாவதையும் தடுக்கிறது. மேலும் அல்சைமர், சோர்வு, பார்வைக்கோளாறு, தசை பலவீனம் போன்ற பிரச்சினைகளை தடுக்கிறது. குறிப்பாக வயதாவதின் அறிகுறியான சுருக்கங்களை தடுக்கிறது.

புற்றுநோயை தடுக்கிறது

சுவையான இந்த பழத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் புற்றுநோய்க்கு எதிராக செயல்படக்கூடிய ஊட்டசத்துக்களை கொண்டுள்ளது, இது புற்றுநோய் செல்களை அழிக்க உதவுவதுடன் பல நோய்களில் இருந்து உங்களை பாதுகாக்கக்கூடும். இதில் உள்ள அதிகளவு வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் பீனாலிக் அமிலம் பல்வேறு புற்றுநோய்களில் இருந்து உங்களை பாதுகாக்கக்கூடும். உங்கள் உணவில் இந்த பழத்தை சேர்த்துக்கொள்வதை உடனே தொடங்குங்கள்.

86873 total views