டயட் இல்லாமல் வெயிட் குறையா இந்த ஒரு பொருள் போதும்! பக்க விளைவுகள் இல்லை

Report
129Shares

எடை குறைப்பில் ஈடுபடும்போது நாம் எடுத்துக் கொள்ளும் கலோரி அளவை கணக்கில் கொள்வது முக்கியம். கொள்ளு ஒரு குறைந்த கலோரி தானியம்.

ஆகவே இதனைக் குறைந்த அளவு எடுத்துக் கொள்வதால் அதிக கலோரிகள் எரிக்கப்படுகின்றன.

நீங்கள் தினசரி உடற்பயிற்சி செய்யாவிட்டாலும், கொள்ளு மட்டும் சாப்பிடுவதால் எடை குறைப்பு சாத்தியமாகிறது. கொள்ளு உடலின் கெட்ட கொழுப்பு அளவைக் குறைப்பதால், எடை அதிகரிப்பிற்கு வாய்ப்புகள் குறைகிறது.

கொள்ளு குறைந்த கலோரி உணவாக இருந்தாலும் இதில் கார்போ ஹைட்ரேட் போதுமான அளவு இருப்பதால், எடை குறைந்தாலும், உங்கள் ஆற்றல் குறைவதில்லை.

கொள்ளு ஒரு லேசான உணவாக இருப்பதால், செரிமான மண்டலத்திற்கு வேலை எளிதாகிறது. உடலில் கொழுப்பு வடிவத்தில் கொள்ளுசேமிக்கப்படுவதில்லை என்பதால் எடை குறைப்பிற்கு ஒரு வகையில் உதவுகிறது.

மேலும், கொழுப்பை எரிக்கவும் இது உதவுகிறது. இது அஜீரணத்தை குறைப்பதில் உதவுகிறது மற்றும் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் வழங்குகிறது.

கொள்ளு , கால்சியம், புரதம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ள ஒரு உணவுப் பொருள். ஆனால் இதன் அருமையை பலரும் உணர்வதில்லை. கொள்ளில் உள்ள இரும்பு சத்து ஹீமோக்ளோபின் கட்டமைப்பிற்கு உதவுகிறது. உடலை ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைக்க உதவும் பாலிபொன் மற்றும் ப்லவனைடு போன்ற அன்டி ஆக்சிடேன்ட்கள் இதில் உள்ளது.

ஆகவே உங்கள் எடை குறைவதோடு நீங்கள் இளமையாகவும் தோற்றம் அளிப்பீர்கள். எடை இழப்புக்கு உதவுகின்ற கொழுப்பு அளவை கட்டுப்படுத்துவதில் இந்த தானியத்தில் உள்ள ஆற்றல்மிக்க மற்றும் டையூரிடிக் பண்புகள் உதவுகின்றன. கொள்ளில் உள்ள பீனால் உள்ளடக்கம் கொழுப்பு திசுக்களைத் தாக்க உதவுகிறது.

பக்க விளைவுகள் இல்லாதது

கொள்ளு எந்த ஒரு பக்க விளைவும் இல்லாத ஒரு தானியம். ஆனால் இயற்கையாக சூடு அதிகம் உள்ள ஒரு உணவுப் பொருள் என்பதால் இதனை எடுத்துக் கொள்ளும்போது அதன் அளவை கவனிக்க வேண்டும்.

குளிர்ந்த வெப்ப நிலையிலும், மழைக் காலத்திலும் இந்த உணவு உங்கள் உடலுக்கு வெப்பத்தைக் கொடுக்கும். ஆகவே குளிர் காலத்தில் இதனை ஒரு சூப்பாக செய்து பருகலாம்.

6144 total views