நைட் ஷிப்டில் வேலை செய்பவர்கள் சிக்கன் சாப்பிடலாமா?... சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

Report
53Shares

நீங்கள் விரும்பி மகிழ்ச்சியாக செய்யும் வேலையில் எப்போதுமே பொறுப்புகள் அதிகமாகவே இருக்கும். மற்ற விஷயங்களை எல்லாம் விட்டுக்கொடுத்து அந்த வேலையை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலை அமைந்திருக்கும்.

நீங்கள் ஆசைப்பட்ட படி உயர்நிலையில் உங்களுக்கு ஒரு பணி அமைந்திருக்கலாம். அதனால் இரவு பகல் பாராமல் உழைத்துத் தள்ளுவீர்கள்.

சரியாக சாப்பிடாமல் அல்லது முறையாக என்ன சாப்பிட வேண்டுமென்று தெரியாமல், எதையாவது கொஞ்சம் கொரித்துவிட்டு செல்வீர்கள். அது மிகவும் கெடுதலான விஷயம்.

பகலில் வேலை செய்பவர்களைவிட நைட் ஷிப்டில் வேலை செய்பவர்கள் தான் முறையாக சாப்பிட வேண்டும்.

உங்களுக்கான ஆரோக்கியமான சிற்றுண்டியை நீங்களே பேக் செய்வது நல்லது. ஏனெனில் ஆரோக்யமான ஸ்னாக்ஸ் மதிய வேளையிலும் இரவு வேளையிலும் கிடைப்பது சிரமம்.

உங்கள் அலுவலகத்தில் அதிகமான உப்பு, கலோரி, சுகர் மற்றும் கொழுப்பு நிறைந்த பதார்த்தங்கள் மட்டுமே கிடைக்கலாம். நீங்கள் ஆப்பிள், உடன் சிறிது சீஸ் அல்லது ஒரு கைப்பிடி அளவு நட்ஸுடன் குறைந்த கொழுப்பு கொண்ட தயிர் சேர்த்துக்கொள்ளலாம்.

கொழுப்பு உணவுகள்

இரவில் வேலை செய்யும்போது, கொழுப்பு நிறைந்த, பொறித்த மற்றும் காரமான உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது.

வருத்த சிக்கன், காரமான மிளகாய், பர்கர் ஆகியவை நெஞ்செரிச்சல், அஜீரணம் போன்றவற்றை உண்டாக்கும். மிக அதிகமான கொழுப்பு நிறைந்த உணவு வகைகளை உண்பது இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்தை அதிகரிக்கும்.

அளவுக்கு அதிகமான சாச்சுரேட்டட் பேட், ரத்தத்தில் கெட்ட கொழுப்பை அதிகரித்து இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்பட வழி வகுக்கிறது. நல்ல கொழுப்பு உடலுக்கு நல்ல விளைவுகளைத் தருகிறது.

தண்ணீர்

உடலில் நீர்ச்சத்து நிறைந்திருக்குமாறு பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியம். உடல் வறண்டு போகாமல் இருக்க நிறைய தண்ணீர் குடிக்கவும். இது நன்றாக முழித்திருக்கவும், பிரெஷ்ஷாக வேலை செய்யவும் உதவும். ஒரு தண்ணீர் பாட்டிலை எப்போதும் உங்கள் மேஜை மீது வைத்திருங்கள். அவ்வப்போது ஒரு சிப் குடிப்பது நல்லது. தண்ணீர் தவிர செயற்கை இனிப்பு சேர்க்காத ஹெர்பல் டீ, 100% சோடியம் குறைந்த பானங்கள் குடிக்கலாம்.

2738 total views