நெஞ்சுவலி ஏற்படும் போது வலது புறம் வலி அதிகரித்தால் என்ன காரணம் தெரியுமா?

Report
155Shares

மார்பில் வலி ஏற்பட்டாலே அது மாரடைப்பு தான் என்று நினைத்துக் கொள்கிறவர்களும் உண்டு. பொதுவாக மாரடைப்பு எந்த நேரத்திலும் ஏற்படலாம் என்பதால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம்.

அதோடு நான் ஆரோக்கியமான வாழ்க்கை முறை வாழ்கிறேன். துரித உணவுகளைச் சாப்பிடுவதில்லை என்று நீங்கள் சொன்னாலும் இதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அப்போது தான் உங்களைச் சுற்றியிருப்பவர்களில் யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டு உடனடியாக முதலுதவி கொடுக்க முடியும்.

இந்த மாரடைப்பில் இருக்கிற முக்கியப்பிரச்சினை நமக்கு தற்போது ஏற்பட்டிருப்பது மாரடைப்பு தானா? இந்த நெஞ்சுவலி மாரடைப்பிற்கான வலியா அல்லது பேனிக் அட்டாக் எனப்படுகிற வலியா என்பதில் குழப்பம் இருக்கும். முதலில் அவற்றிற்கான வித்தியாசங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

அறிகுறிகள்

பொதுவாக இவை இரண்டுக்குமே ஒரே மாதிரியான அறிகுறிகள் தான் தெரிந்திடும். மூச்சு வாங்குதல், மார்பில் வலி,அதீத வியர்வை,குமட்டல் போன்றவை ஏற்படும்.

மாரடைப்பு

இதயத்தில் இருக்கிற தசைகளில் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். இதயத்தில் இருக்கிற கார்னரி ஆர்டரிஸ் தான் இதற்கு பொறுப்பு. இதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் கூட பெரும் பிரச்சனையாகிடும்.

அந்த ஆர்டரிஸில் நீங்கள் அதிகமாக எடுத்துக் கொள்கிற கொழுப்பு,ப்ரோட்டீன், கால்சியம் போன்றவை அங்கே படர்ந்திடும். இதனால் ரத்த ஓட்டத்தில் சீரான தன்மை இருக்காது. இது தொடர்ந்து சேர்ந்து கொண்டே வர... நாளடைவில் அவை அடைப்பு ஏற்படும். ஒரு கட்டத்தில் அந்த வழிதடத்தையே அடைக்கும் அளவிற்கு வளர்ந்ததும் நமக்கு மாரடைப்பு ஏற்படுகிறது.

கண்டுபிடிக்கும் வழி

மாரடைப்பு ஏற்படுகிறவர்களுக்கு மார்பில் தாங்க முடியாத வலி ஏற்படும் . சில நேரங்களில் பெரும் பாரம் ஒன்று அழுத்துவது போன்றதொரு உணர்வு மேலோங்கும். பொதுவாக இந்த வலி நடு நெஞ்சில் ஏற்படக்கூடும்.

பின்னர் மெல்ல நகர்ந்து இடது கை, தோல்பட்டை பகுதியிலும் அப்படியே முதுகுப் பக்கமும் வலி பரவிடும்.

சிலருக்கு பற்கள், தடை பகுதியிலும் வலி இருக்கும். தொடர்ந்து ஒரே மாதிரியான வலி இருக்காது, ஐந்து நிமிடங்களுக்கு மேல் இவை நீடிக்காது. அதற்குள்ளாகவே வலி இருக்கும்.

மூச்சு வாங்குதல்

பொதுவாக நெஞ்சில் வலி ஏற்படும் போது மூச்சு வாங்கினால் அது மாரடைப்பு அல்ல பேனிக் அட்டாகாகத் தான் இருக்கும். மார்பில் வலி ஏற்பட்டதுமே அந்த பதட்டமடைவது தான் காரணம்.

பேனிக் அட்டாக் அறிகுறிகள்

கடினமான வேலை செய்யும் போது மட்டுமல்ல பிற சாதரண நாட்களிலும் ஏற்படக்கூடும். இந்த வலி நீண்ட நேரம் இருக்கும். வலி ஆரம்பித்து சுமார் பத்து நிமிடங்கள் கழித்தே நம்மால் தாங்க முடியாத வலி ஏற்படும்.

இந்த வலி நம் மார்பு கூட்டைச் சுற்றியே இருக்கும். இந்த வலி வலதுப்பக்கம், விரல்கள் கால்ஆகியவற்றில் வலி ஏற்படும் மயக்கம் வருவது போலத் தோன்றும்.

என்ன செய்ய வேண்டும்?

மார்பில் என்ன வலி ஏற்பட்டாலும் அது என்ன மாதிரியான வலி எதனால் ஏற்பட்டது என்பதை மருத்துவரைச் சந்தித்து உறுதி செய்து கொள்ளுங்கள். சில அறிகுறிகளை வைத்து மட்டும் நீங்களே எதையும் உறுதி செய்து கொள்ள வேண்டாம்.

உடனடியாக மருத்துவ உதவி கிடைக்கவில்லை எனில் அதுவே பெரும் பிரச்சனை ஏற்படுத்திடும் என்பதால் மருத்துவ ஆலோசனை பெறுவதில் தயக்கம் வேண்டாம்.

வந்த பின் அவதிப்படுவதை விட அதனை வராமல் தடுப்பது தான் மிகவும் புத்திசாலித்தனமானது என்பதை மறக்க வேண்டாம்.

6271 total views