காலை எழுந்ததும் தண்ணியில் உப்பு கலந்து வாய் கொப்பளிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

Report
112Shares

தண்ணியில் உப்பு கலந்து வாய் கொப்பளிக்கும் பழக்கம் நல்ல ஆரோக்கியத்தை அளிக்கிறது.

தண்ணியில் உப்பு கலந்து வாய் கொப்பளிப்பது என்பது ஒரு இயற்கை நிவாரணம். இது தொண்டை கரகரப்பு போன்றவைக்கு இயற்கை மருத்துவமாக திகழ்கிறது.

பாக்டீரியா போன்றவற்றால் ஏற்படும் எரிச்சல் போன்றவற்றை இது எளிதாக குணப்படுத்தும்.

தினமும் தண்ணியில் உப்பு கலந்து வாய் கொப்பளிப்பதால் கிடைக்கும் பயன்கள்

தொண்டை

தொண்டை கரகரப்பு மட்டுமின்றி, தண்ணியில் உப்பு கலந்து வாய் கொப்பளிப்பதால் தொண்டை சுத்தம் செய்யப்படுகிறது. மேலும், இது வாயையும் சுத்தம் செய்ய பெருமளவில் உதவும். பிரஷ் செய்தவுடன், தண்ணியில் உப்பு கலந்து வாய் கொப்பளிக்க மறக்க வேண்டாம்.

பி.எச் அளவு

வாயில் இருக்கும் இயற்கையான பி.எச் அளவை பாக்டீரியாக்கள் டிஸ்டர்ப் செய்யும். இதுவே, நீங்கள் தண்ணியில் உப்பு கலந்து வாய் கொப்பளித்தால் பாக்டீரியாக்களும் அழியும், நீங்கள் இயற்கையாக உடலில் பி.எச் அளவையும் சீராக வைத்துக் கொள்ள முடியும்.

மூக்கடைப்பு

மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகள் இருக்கும் போது, நாளுக்கு நான்கு முறை இப்படி தண்ணியில் உப்பு கலந்து வாய் கொப்பளித்து வந்தால் நல்ல நிவாரணம் அளிக்கும் என சில ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆரோக்கியமான ஈறுகள்

மேலும், தினமும் காலையில் பல் துலக்கியதும், தண்ணியில் உப்பு கலந்து வாய் கொப்பளித்து வந்தால் ஈறுகளின் ஆரோக்கியம் மேலோங்கும்.

இரத்த ஓட்டம்

இதமான நீரில் உப்பு கலந்து வாய் கொப்பளித்து வந்தால் தொண்டைக்கு ஆரோக்கியம் அளிப்பதுடன் சேர்த்து, இரத்த ஓட்டத்தையும் ஊக்குவிக்கிறது.

மேலும், வாய் கொப்பளிக்கும் நீரில் அதிக அளவு உப்பு சேர்க்க வேண்டாம். இதுவும் தவறான விளைவுகளை அளிக்க வாய்ப்புகள் உண்டு.

4798 total views