காலையிலேயே புத்துணர்ச்சியின் உச்சம் தொடலாம்.. ஒரு வாழைப்பழம் மட்டுமே போதும்?

Report
98Shares

காலை உணவாக வாழைப்பழத்தை சாப்பிடுவதால் வயிறு நிரம்புவதோடு, ஏராளமான ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும். நாள் முழுதும் புத்துணர்ச்சியினால் சுறு சுறுப்பாக இயங்களாம்.இன்று பலருக்கும் காலையில் அலுவலகத்திற்கு செல்லும் அவசரத்தில் சமைத்து காலை உணவை சாப்பிட நேரம் இல்லாமையால், ஏராளமானோர் முக்கியமான காலை உணவையே தவிர்த்துவிடுகிறார்கள்.

இப்படி ஒருவர் காலை உணவைத் தவிர்த்தால் ஏராளமான ஆரோக்கிய பிரச்சனைகளால் அவஸ்தைப்பட நேரிடும். சிலருக்கு வாழைப்பழத்தை காலை உணவாக சாப்பிடலாமா என்ற கேள்வி எழும்.ஆனால் சில ஆய்வுகள் வாழைப்பழத்தை காலை உணவாக சாப்பிட்டால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதாக சொல்கிறது. உங்களுக்கு காலை உணவாக ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்.

கலோரி குறைவு

வாழைப்பழத்தில் கலோரிகள் குறைவு. ஆகவே காலை உணவாக வாழைப்பழத்தை சாப்பிட்டால், பல மணிநேரம் பசி எடுக்காமல் இருப்பதோடு, அதிகமான கலோரியை உட்கொண்டோமா என்ற ஓர் உணர்வைத் தவிர்க்கலாம். அதோடு காலை உணவாக வாழைப்பழம் சாப்பிடும் போது, அது வேலை நேரத்தில் கண்ட உணவுகளின் மீதுள்ள ஆவலைத் தடுக்கும்.

காலைச் சோர்வு

சுவையான மற்றும் மென்மையான வாழைப்பழம், செரிமான பாதையில் எளிதில் நகர்ந்து செல்லக்கூடியது. குறிப்பாக கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் சந்திக்கும் காலைச் சோர்வின் போது, வாழைப்பழத்தை சாப்பிட்டால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு ஆற்றலை வழங்கி, சோர்வில் இருந்து விடுவிக்கும்.

புரோபயோடிக்

வாழைப்பழத்திற்கு புரோபயோடிக் போன்று செயல்படும் திறன் உள்ளது. ஆகவே அன்றாட காலை உணவில் ஒரு வாழைப்பழத்தை சேர்த்து வந்தால், அது குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை மேம்படுத்தும். மேலும் வாழைப்பழம் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் நொதிகளையும் உற்பத்தி செய்யும்.

மலச்சிக்கல்

வாழைப்பழத்தில் உள்ள அதிகளவிலான டயட்டரி நார்ச்சத்துக்கள், குடலியக்கத்தை மேம்படுத்த உதவும். குடலியக்கம் சிறப்பாக இருந்தால், செரிமான பிரச்சனைகளான மலச்சிக்கல் வருவது தடுக்கப்படும். ஆகவே மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், காலை உணவாக வாழைப்பழத்தை சாப்பிடுங்கள்.

எடை குறைவு

எடையைக் குறைக்க நினைப்போரது டயட்டில் வாழைப்பழம் மிகவும் சிறப்பான உணவுப் பொருள். ஏனெனில் இது வயிற்றை நிரப்புவதோடு, எளிதில் செரிமானமாகும்.

வாழைப்பழம் சாப்பிட்டால் மெட்டபாலிசம் மேம்படுவதோடு, இதில் உள்ள கார்போஹைட்ரேட் ஆற்றலாக மாற்றப்பட்டு, வயிற்றை நிரப்பும். இதனால் கண்ட உணவுகளின் மீதுள்ள நாட்டம் குறைந்து, உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.அதிலும் காலையில் வாழைப்பழத்தை சாப்பிட்ட பின்பு, சுடுநீரில் எலுமிச்சை சாறு பிழிந்து குடித்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.

3308 total views