பழைய செருப்பை கழற்றியெறிவதைப் போல இதையும் தூக்கியெறியுங்கள்! இல்லை நிச்சயம் ஆபத்து?

Report
966Shares

இன்றைய நவீன உலகத்தில் மனம் சார்ந்த பிரச்சனைகள் குறிப்பாக மன அழுத்தம் பலருக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இதற்கு ‘ஈகோ' ஒரு காரணம், இதை தூக்கியெறியுங்கள். இல்லை ஆபத்து தொடந்து கொண்டு இருக்கும்.

இயந்திரத்தனமான வாழ்க்கையினால் பொழுது போக்கு, மற்றும் உறவினர்களுடன் போதிய அளவு நேரம் செலவிட முடியாமல் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண தொடந்தும் படியுங்கள்.

பாதம்

கால் பாதங்களில் வலி ஏற்பட்டால் நீங்கள் அணிந்திருக்கும் செருப்பு அல்லது ஷூ சரியில்லை என்று நினைப்பதோடு நிறுத்தி விடாமல் இன்னொரு மிகப்பெரிய காரணமும் இருக்கிறது,

‘ஈகோ', நானே பெரியவன், எனக்கு யாருமே மரியாதை கொடுக்கவில்லை எல்லாரும் எனக்கு கீழ் தான்,பணத்தால் நான் பெரியவன், பதவியால் நான் பெரியவன் என்று நீங்கள் நினைத்து கர்வப்படுகிற விஷயத்தினால் பாதம் வலி உண்டாகும். செருப்பை கழற்றியெறிவது போல ஈகோவையும் தூக்கியெறியுங்கள்.

மருத்துவம்

தற்போது பல வகையான மருத்துவ முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.

சில மருத்துவ முறைகளில் வெளிப்புறத்தில் ஏற்பட்டிருக்கும் வலிக்கு மட்டுமே மருந்து கொடுக்கப்படுகிறது, அதற்கான காரணத்தை கண்டறிந்து அதனை தீர்த்தால் தானே முழுவதும் குணமாகும், மாறாக வெளியில் நமக்கு அறியப்படுகிற வலிக்கு மட்டும் மருந்து மாத்திரைகளை உட்கொண்டால் எப்படி அது சரியாகும்?

மனம்

உங்களது மனமும் உடலும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன என்பதே உண்மை, உங்களது எண்ணங்களை ஒரு முகப்படுத்த தவறும் போது தான் இது போன்ற பிரச்சனைகள் எல்லாம் எழுகிறது.

அவற்றை கண்டறிந்து சரி செய்தாலே பாதி உடல் நலன் தொடர்பான பிரச்சனைகள் முடிந்திடும்.

உங்களது உடல் வலி ஒவ்வொன்றுக்கும் உங்களுக்கு மனரீதியாக என்னப்பிரச்சனை இருக்கலாம் என்பதை இங்கே பட்டியலிட்டிருக்கிறோம், இனியும் தாமதிக்காமல் வெறும் வலிகளுக்கான சிகிச்சைகளை எடுக்காமல் உங்களது மனதையும் சற்று கவனம் செலுத்துங்கள்.

தலை வலி

பெரும்பாலானோருக்கு இருக்கக்கூடிய பிரச்சனை இது தான். யாரைக்கேட்டாலும் தலைவலி என்கிறார்கள்.அடிக்கடி தலைவலி உங்களுக்கு ஏற்படுகிறது என்றால் உங்களுக்கு ஸ்ட்ரஸ் பாதிப்பு இருக்கலாம்.

தொடர் வேலையினால் எந்த விதமான ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து வேலைப்பளு இருந்தாலும் உங்களுக்கு இந்த பாதிப்பு உண்டாகும். உரிய ஓய்வு எடுத்தால் சரியாகும்.

கழுத்து வலி

அடிக்கடி கழுத்து வலி, அல்லது கழுத்துப் பகுதியில் மிகத் தீவிரமாக நாட்கணக்கில் வலியெடுத்தால் மனதில் குற்ற உணர்வு மேலோங்கியிருக்கும், தங்களை மன்னிக்கவில்லையே, என்ற ஏக்கம் தான் காரணமாக இருக்கும்.

இதனால் எந்த நபருடன் சண்டையிட்டோர்களோ அவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள்.

தோல்பட்டை வலி

தோல்பட்டை வலி இருந்தால் பெரும்பாலும், தவறான கோணத்தில் படுத்திருப்போம், அல்லது அதிக எடையை தூக்கியிருப்போம் என்று நினைத்துக் கொள்வோம்.

ஆனால் உண்மையில் உங்களால் தாங்க முடியாத மன அழுத்தம் ஏற்பட்டிருக்கலாம்.

குறிப்பிட்ட ஒரு பிரச்சனை உங்களால் சமாளிக்க முடியாது என்று நினைத்தவை இருந்தால் அதனால் ஏற்பட்ட பாதிப்பு கூட உங்களுக்கு வலியை ஏற்படுத்தும்.

மேல் முதுகு வலி

உட்காரும் இடம், படுத்த இடம் சரியாக இல்லையென்றால் முதுகு வலி ஏற்படக்கூடும். ஆனால் இன்னொறு முக்கியமான விஷயத்திற்கும் உங்களது முதுகில் வலியெடுக்கக்கூடும்.

அதாவது உங்களை நிராகரிப்பதாக உணர்ந்தால், என்னை யாரும் விரும்பவில்லை, எனக்கு அன்பு செலுத்த யாருமில்லை என்று நீங்கள் உணர்ந்தால் அதனால் ஏற்படுகிற மன அழுத்தம் கூட மேல் முதுகு வலியை ஏற்படுத்திடும்.

கீழ் முதுகு வலி

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் அல்லது ஒரே பொஷிசனில் உட்கார்ந்திருப்பதால் மட்டுமல்ல பணக்கவலை இருந்தாலும் கீழ் முது வலிக்கும்.

ஆம், பணம் தொடர்பான பிரச்சனைகள், அல்லது பணப் பற்றாகுறை தொடர்பான ஏக்கம், கவலை ஆகியவை இருந்தாலும் உங்களது கீழ் முதுகில் வலி உண்டாகும்.

மூட்டுப் பகுதிகள்

கை,கால் மூட்டுப் பகுதியில் வலியெடுத்தால் வருங்காலம் குறித்த பயமோ அல்லது ஏக்கமோ ஏற்பட்டிருந்தால், அது குறித்த கவலை இருந்தால் மூட்டுப்பகுதியில் வலி உண்டாகும்.

வலிக்கு வெறும் எண்ணையை வாங்கித் தேய்க்காமல் உண்மையான காரணத்தை கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியமாகும்.

கை வலி

கைகள் வலியெடுத்தால் தனிமையை உணர்கிறீர்கள் என்று அர்த்தம், நீங்கள் தனிமையாக உணரும் தருணத்தில் கையை பலவீனமாக உணர்வீர்கள். அப்போது , நீங்கள் செய்ய வேண்டியது உங்களது நண்பர்களிடத்தில் பேசுங்கள்.

பிறர் வந்து நம்மிடம் பேசட்டும் என்று காத்திருக்காமல் நாமாக சென்று பேசுவது நல்லது.

இடுப்பு

முடிவெடுப்பதில் சிரமங்கள் அல்லது அது தொடர்பான குழப்பங்கள் ஏற்பட்டிருந்தால் முடிவெடுப்பது தொடர்பாக ஆழமாக சிந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இடுப்பு வலி உண்டாகும்.

சிறிது தூரம் நடைப்பயிற்சி மேற்கொண்டு, முதலில் மனதை ரிலாக்ஸ் செய்திடுங்கள் அதன் பிறகு நிதானமாக முடிவெடுக்கலாம்.

33763 total views