வயிறு சரியில்லையா? வாய்வு தொல்லையா? இதனை எப்படி சரி செய்வது?

Report
850Shares

நமது வாழ்வில் ஒரு நாளாவாது வயிற்று பிரச்சனையால் அவதிப்பட்டு இருப்போம்.

ஒருவருக்கு வயிற்று வலி ஏற்பட அசுத்தமான உணவுகள், நாள்பட்ட நோய்கள் என பல காரணங்கள் இருக்கலாம் எனப்படுகின்றது.

பொதுவாக வயிற்று பிரச்சனைகளை சந்தித்தால் கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட மருந்துகளை வாங்கி போடுவது உண்டு.

இதனை தவிர்த்து வீட்டில் இருக்கு சமையலுக்கு பயன்படும் இஞ்சியை கொண்டு வயிற்று பிரச்சினைகளை எளிதில் சரி செய்ய முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

  • இஞ்சியின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக வெட்டி, அவ்வப்போது ஒரு கிராம் அளவில் உட்கொண்டு வாருங்கள்.

  • இஞ்சியை அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த சாற்றினை வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து கலந்து, சுவைக்கு சர்க்கரை சேர்த்து, தினமும் குடித்து வாருங்கள். இதனால் வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபடுவதோடு, வயிற்று உப்புசமும் நீங்கும்.

  • 1/2 ஸ்பூன் துருவிய இஞ்சியை, 1 டம்ளர் நீரில் போட்டு, 3-5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, சுவைக்கு சர்க்கரை அல்லது தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த டீயை தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், வயிற்று பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

  • புதினா இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அந்நீரில் தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம்.

  • சீமைச்சாமந்தி டீயை ஒரு கப் குடித்தால், வயிற்றுத் தசைகள் ரிலாக்ஸாகி, வலி மற்றும் பிடிப்புக்களைக் குறைக்கும். ஏனெனில் சீமைச்சாமந்தி டீயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், வயிற்று பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும்.

loading...