நடிகர் விஷால் திருமணம் செய்யப்போகும் பெண் இவர்தான்... வெளியான புகைப்படம்

Report
1531Shares

2004 ஆம் ஆண்டு செல்லமே படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனவர் விஷால்.

இதைத்தொடர்ந்து பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.

இத்துடன் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட்டு தலைவராகவும் தேர்வு செய்யப்பட்ட விஷால் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டிய பின் திருமணம் செய்து கொள்வேன் எனகூறியிருந்தார்.

ஆனால் தற்போது ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் விஜய் ரெட்டியின் மகள் அனிஷாவை திருணம் செய்து கொள்ள இருப்பதாகவும், நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் பேசப்பட்டது.

இது குறித்து விஷால் கூறுகையில்,

அனிஷாவை திருமணம் செய்து கொள்ள இருப்பது உண்மைதான். ஆனால் இது காதல் திருமணம் அல்ல. பெற்றோர்கள் நிச்சயித்த திருமணம். நிச்சயதார்த்தம் எதுவும் நடக்கவில்லை. நிச்சயதார்த்தம், திருமண தேதிகளை குடும்பத்தினர் தீர்மானித்து கொள்வார்கள். மேலும், முன்னதாகவே கூறிய மாதிரி நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்தில்தான் திருமணம் நடைபெறும் என கூறியுள்ளார்.

மேலும் விஷால் மணமுடிக்கவுள்ள பெண்ணின் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

53175 total views