கிரிக்கெட் பிரேக் மத்தியில் தோனி செல்ல மகளுக்காக என்ன செய்தார் தெரியுமா

Report
166Shares

இந்திய கிரிக்கெட் அணி வீரர் மகேந்திர சிங் தோனி கிரிக்கெட் போட்டி பிரேக் மத்தியில் தனது மகள் ஜிவாவின் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று கூல் டாடியாக காட்சியளிக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் வீரர் டோணி தனது சாதனையால் உலகப் புகழ் பெற்றது போல அவருடைய மகள் ஜிவாவுன் இணைதள டார்லிங் என்று செல்லமாக அழைக்கப்படுபவர்.

ஜிவாவின் அழகான புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில், அவர் மலையாளத்தில் பாடிய பாடல்களும் இணையதளத்தில் அதிக பார்வையார்களை ஈர்த்தது.

இணையத்தில் அதிக பார்வையார்களைக் கொண்ட பிரபலக் குடும்பம் என்றால் அது டோணி தான். டோணியின் புகைப்படங்கள், ஜிவாவின் குறும்புகள், சாக்ஷியின் டுவிட்டர், இன்ஸ்டகிராம் பக்கங்களில் இருந்து கிடைக்கும் அற்புதமான காட்சிகள். இதே போன்று நேற்றும் டோணி, ஜிவாவின் ஒரு புகைப்படம் இணையத்தை தெறிக்க விட்டுள்ளது.

தென்ஆப்ரிக்காவிற்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பிசியாக இருக்க டோணி கிடைத்த பிரேக்கில் தன்னுடைய மகளின் பள்ளியில் நடைபெற்ற முதல் ஆண்டுவிழா நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

குட்டி தேவதை ஜிவா தலையில் கிரீடத்துடன் அழகான இளவரசி போல காட்சியளிக்க அப்பா டோணி மடியில் வைத்துக் கொண்டு கூல் டாடியாக போட்டோவிற்கு போஸ் கொடுக்கிறார்.

ஜிவாவுடன் மட்டுமின்றி மற்ற குழந்தைகளுடனும் டோணி உரையாடும் வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஸ்பைக் முடி வைத்துக் கொண்டு கருப்பு ஜாக்கெட்டில் ஹீரோ போல காட்சியளிக்கிறார் குட்டி இளவரசி ஜிவாவின் தந்தை தோனி.

தோனி ரசிகர்கள் மன்றமும் ஜிவாவின் முதல் ஆண்டுவிழா புகைப்படங்கள் பலவற்றை பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் அனைத்தும் லைக்ஸ்களை அள்ளி வருகின்றன.

பிப்ரவரி 1ம் தேதி தென்ஆப்ரிக்காவிற்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் சேர்ந்து களமிறங்க உள்ளார் தோனி.

இதே போன்று ஐபிஎல் சீசன் 11 ல் சென்னை ப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் மஞ்சள் நிற ஜெர்சியில் மீண்டும் களமிறங்க உள்ளார் தோனி.

7325 total views