ரயிலில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர்..!

Report
107Shares

ஃப்ரான்ஸ் நாட்டில் இளம்பெண் ஒருவருக்கு ரயிலில் வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்த இளைஞர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஃப்ரான்ஸ் நாட்டில் Bois-le-Roi (Seine-et-Marne) நகர் நோக்கி பயணிக்கும் ligne R வழி ரயிலில் தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அதாவது, கடந்த சனிக்கிழமை 19 வயது இளம்பெண் ஒருவர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, 26 வயதுடைய இளைஞர் ஒருவர் குறித்த இளம்பெண்ணிடம் பேச முற்பட்டார்.

ஆனால் அதற்கு குறித்த இளம்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த இளைஞர் குறித்த இளம்பெண்ணுடன் தகாத முறையில் நடந்துகொண்டுள்ளார். பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

2881 total views