பத்து மாத குழந்தையை ஏழாவது மாடியிலிருந்து வீசிய கொடூர தாய்!

Report
90Shares

தனது பத்துமாத குழந்தையை ஏழாவது தளத்தில் இருந்து வீசி கொலைசெய்த பெண் ஒருவருக்கு நேற்று எட்டு வருட சிறைத்தண்டனை வழங்கப்படுள்ளது.

Raphael என பெயரிடப்பட்டிருந்த 10 மாத குழந்தையை கடந்த 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 29 ஆம் திகதி பரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் உள்ள தனது வீட்டில் வைத்து தூக்கி வெளியே எறிந்துள்ளார். குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மிகவும் மோசமான மற்றும் புரியாத சம்பவமாக இது பார்க்கப்பட்டது. சம்பவத்தைத் தொடர்ந்து 34. வயதுடைய குழந்தையின் தாயார் கைது செய்யப்பட்டார். மிக நீண்ட மற்றும் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.

கைது செய்யப்பட்ட Myriam D எனும் பெண், முதல் நாள் விசாரணைகளில், 'நானும் எனது குழந்தையும் பாய்வதாக தான் எண்ணியிருந்தோம். என்னை ஏதோ ஒன்று தடுத்துவிட்டது. அதனாலே தான் அவனை போகவிட்டேன்!' என தெரிவித்திருந்தார். குழந்தையின் தந்தையும் விசாரிக்கப்பட்டார். இச்சம்பவத்தினால் மிகவும் மனமுடைந்து இருந்தார். பின்னர் அவர் மனநல சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை பரிஸ் Assize நீதிமன்றத்தில், குறித்த பெண்ணுக்கு எட்டுவருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

3783 total views