வெல்லத்துடன் இந்த ஒரு பொருளை சேர்த்து சாப்பிட்டால் இவ்வளவு அற்புதம் நடக்குமா? எப்போது சாப்பிடுவது நல்லது?

Report
143Shares

சில உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடும் போது, அவற்றில் உள்ள சத்துக்கள் உடலால் விரைவில் உறிஞ்சப்பட்டு, ஒரு நல்ல மாற்றத்தை உடலில் வேகமாக காண முடியும்.

அந்த வகையில் தற்போது நோயெதிர்ப்பு சக்தி முக்கியமான ஒன்றாக இருப்பதால், அவற்றை அதிகரித்து, பல வகையான நாள்பட்ட நோய்கள் பெருகுவதைத் தடுக்கும் ஒரு அற்புதமான உணவுக் கலவை தான் வெல்லம் மற்றும் பொட்டுக்கடலை.

பொட்டுக்கடலை

பெரும்பாலான இந்திய சமையலறையில் கட்டாயம் இருக்கும் பொதுவான பொருள் தான் பொட்டுக்கடலை. சட்னி செய்ய பயன்படுத்தப்படும் பொட்டுக்கடலை, சிலருக்கு அது ஒரு ஸ்நாக்ஸ் என்பது தெரியுமா? ஆம், சும்மா இருக்கும் போது பொட்டுக்கடலையை சாப்பிடுவோர் ஏராளம். பழங்காலத்தில் கூட பொட்டுக்கடலை நம் முன்னோர்களால் அதிகம் சாப்பிடப்பட்ட உணவுப் பொருட்களுள் ஒன்று எனலாம்.

பொட்டுக்கடலையில் புரோட்டீன் மட்டுமின்றி, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களான வைட்டமின் பி6, வைட்டமின் சி, ஃபோலேட், நியாசின், தியாமின், ரிபோஃப்ளேவின், மாங்கனீசு, பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் காப்பர் போன்றவையும் அதிகம் நிறைந்துள்ளன.

வெல்லம்

தற்போது ஆரோக்கியத்தின் மீது அக்கறை அதிகரித்தவுடன், பலரது வீடுகளில் சர்க்கரைக்கு மாற்றாக வெல்லம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெல்லத்தில் இரும்புச்சத்து, ஜிங்க் மற்றும் செலினியம் அதிகம் இருப்பதோடு, சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் நிறைந்துள்ளது.

இத்தகைய வெல்லத்தை, பொட்டுக்கடலையுடன் சேர்த்து சாப்பிடும் போது, உடலினுள் பல அற்புதங்கள் நிகழும்.

பொட்டுக்கடலை மற்றும் வெல்லத்தை ஒன்றாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

  • வெல்லம் மற்றும் பொட்டுக்கடலை இரண்டிலுமே ஜிங்க் அதிகம் உள்ளது இது நோயெதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்தும்.
  • சுவாசம் தொடர்பான பிரச்சனைகளை தவிர்க்க தினமும் சிறிது வெல்லத்தை பொட்டுக்கடலையுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது.
  • இதனால் நுரையீரல் சுத்தமாகி, சுவாச பிரச்சனைகளில் இருந்து விரைவில் விடுபடலாம்.
  • பொட்டாசியம் நிறைந்த உணவுகள் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற இதயம் சம்பந்தமான பிரச்சனைகளைத் தடுக்க உதவும்.
  • இந்த உணவுக் கலவையில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால், இதய பிரச்சனைகள் வராமல் இருக்க பொட்டுக்கடலை மற்றும் வெல்லத்தை தினமும் சிறிது சாப்பிடுவது நல்லது.
  • அதோடு இந்த உணவுக் கலவை சொத்தைப் பற்களைத் தடுப்பதில் நல்லது மற்றும் உடல் எடையைக் குறைக்கவும் உதவி புரியும்.
  • வெல்லத்தில் இரும்புச்சத்து உள்ளது மற்றும் பொட்டுக்கடலையில் புரோட்டீன் உள்ளது.
  • இவை இரண்டுமே பெண்களுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்துக்கள்.
  • மாதவிடாய் பிரச்சனைகளை சந்திக்கும் பெண்கள் தினமும் பொட்டுக்கடலை மற்றும் வெல்லத்தை சாப்பிட்டால், அப்பிரச்சனை நீங்கி, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

எப்போது சாப்பிடுவது நல்லது?

பொட்டுக்கடலை மற்றும் வெல்லத்தை காலையில் அல்லது மாலை வேளையில் ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்.