வீட்டுல கடலை பருப்பு இருக்கா? மொறுமொறுவன யாழ்ப்பண ஸ்டைலில் பக்கோடா செய்வது எப்படி?

Report
459Shares

நம்மில் பல பேருக்கு மிகவும் பிடித்த நொறுக்குத் தீனியில் பக்கோடா.

அந்த பகோடாவை மொறுமொறுப்பாக யாழ்ப்பாண முறையில் சுவையாக எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
 • கடலை பருப்பு - 250 கிராம்
 • உள்ளிப்பல் - 12
 • கருவேப்பிலை - சிறிதளவு
 • மிளகாய் துகள்கள் - 1 1/2 தேக்கரண்டி
 • உப்பு - தேவையான அளவு
 • பெருஜீரகம் - 1/2 தேக்கரண்டி
 • ஓமம் - 1/2 தேக்கரண்டி
 • எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை
 • கடலை பருப்பை 8 மணிநேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
 • மிளகாயை வெறும் கடாயில் வறுத்து துகள்களாக அரைத்துக் கொள்ளுங்கள்.
 • உள்ளிப்பல்லையும் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும், ஓமத்தை இடித்து எடுத்துக் கொள்ளவும்.
 • அரைத்த கடலை பருப்புடன் அரைத்த உள்ளிப்பல்,கருவேப்பிலை,மிளகாய் துகள்கள்,பெருஜீரகம் மற்றும் ஓமம் சேர்த்து மாவை நன்றாக பிசைந்து கொள்ளவும்.
 • பின் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மாவை சிறிய துண்டுகளாக மிதமான தீயில் பொரித்து எடுத்தால் மொறுமொறுப்பான யாழ்ப்பாண பகோடா தயார்.
loading...