உடம்பு வலி, சளிக்கு அருமையான மருந்து... கிடுகிடுவென உயரும் விலை! வாங்க அலைமோதும் மக்கள்

Report
1288Shares

ஊரடங்கினால் அசைவ பிரியர்களின் முழு கவனமும் கருவாட்டின் பக்கம் தற்போது திரும்பியுள்ளது.

ஊரடங்கு காரணமாக சிக்கன், மட்டன், கடல் உணவுகள் இன்றி தவிக்கும் அசைவ பிரியர்களின் கவனம் தற்போது கருவாட்டின் பக்கம் திரும்பியுள்ளது. இதனால் கருவாட்டின் விலை கிலோவுக்கு 200 ரூபாய் வரை அதிகரித்து இருப்பதாக விற்பனையாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

இதேபோல நங்கு, அயிலை, செம்மீன் உள்ளிட்ட கருவாடுகளின் விலையும் கிலோவுக்கு 150 முதல் 200 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. சளி, உடல் வலியை போக்கும் என கூறப்படும் நெத்திலி கருவாடு கிலோவுக்கு 200 வரை உயர்ந்ததால் மக்கள் பாதி அளவே வாங்குவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

குறிப்பாக ஒடிசா, கேரளா, கொல்கத்தா போன்ற மாநிலங்களில் இருந்து கருவாடு வருகை குறைந்துள்ளதாலும், அசைவ பிரியர்களின் திடீர் கவனத்தினாலும் கருவாட்டின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

loading...