சாதத்தை இப்படி சாப்பிட்டு வந்தால் போதும்.. சர்க்கரை நோய் உட்பட எந்த நோயும் வராதாம்..!

Report
945Shares

உடல் ஆரோக்கியமாக இருக்கும் சராசரி மனிதர் ஒருவர் அன்றாட வாழ்க்கையில் சாப்பிடும் சாதம் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருவதில்லை. அதனை அவன் எப்படி சாப்பிடுகிறான் என்பதை பொறுத்துதான் வருகிறது.

இன்று குக்கரில் வேகவைத்த சாதத்தை பலரும் சாப்பிடுகிறார்கள். கஞ்சியை வடிக்காமல் சாதம் சாப்பிடுவதால் தான் நீரிழிவு ஏற்படுகிறது

சாதம் வடித்த கஞ்சி சூடாக இருக்கும்போது சிறிது உப்பைப்போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை சரியாகும்.

சாதம் உலையில் கொதிக்கும் போதே கஞ்சியை எடுத்துப் பருகினால் நீர்க்கடுப்பை நீக்கும்.

கொதிக்கக் கொதிக்க சாதத்தை சாப்பிடக்கூடாது. சாதத்தை மிதமான சூட்டிலேயே சாப்பிட வேண்டும்.

ஆனால் சாதத்தை சில்லென்று, ஆறிப்போய் சாப்பிட்டால் கீல் வாதம், மூட்டு வாதத்தை ஏற்படுத்தும்.

பழையச் சோறு சாப்பிட்டுத்தான் நம் முன்னோர்கள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார்கள்.

சாதத்தில் தண்ணீர் ஊற்றி, மறுநாள் காலையில் பழைய சோற்றை சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சி, வலிமை தருவதுடன் வயிற்றுக்கோளாறு, அல்சர், மூட்டு வலி, தோல் நோய்கள் ஆகியவை பாதிக்காமல் பாதுகாக்கிறது.

சம்பா சோறு வயிற்றுப்பொருமலுக்கு மிகவும் நல்லது. வாழையிலையில் சாப்பிடுவதால் அதிலுள்ள துவர்ப்பு சத்து உடலில் சேர்ந்து நன்மை செய்கிறது. காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிட்டால் தொப்பையைக் கரைக்கும்.

பழைய சோற்றில் தயிர் ஊற்றி சாப்பிடக்கூடாது. மோரைக் கடைந்து ஊற்றி சாப்பிட வேண்டும்.

சாதம் வெதுவெதுப்பாக இருக்கையில் பசும்பால் ஊற்றி சாப்பிட்டால் தண்ணீர்த்தாகம் ஏற்படுவதும், பித்தம் உண்டாவதும் நீங்கும்.

பச்சரிசி சோற்றில் பால் சேர்த்துச் சாப்பிட வாதம், பித்தம் நீங்கும்.

மோர் சாதம் செரிமானக் கோளாறுகளை நீக்கி, வாதம், பித்ததை தணிக்கிறது.

சம்பா சோறு வயிற்றுப்பொருமலுக்கு மிகவும் நல்லது.

வாழையிலையில் சாப்பிடுவதால் அதிலுள்ள துவர்ப்பு சத்து உடலில் சேர்ந்து நன்மை செய்கிறது.

காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிட்டால் தொப்பையைக் கரைக்கும்.

உணவை நன்றாக மென்று, பொறுமையாக உண்ணுங்கள்.

ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெயில் மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பட்ட பண்டங்களைச் சாப்பிடக் கூடாது. இதனால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்.

மைதாவினால் செய்யப்படும் பரோட்டா போன்ற பொருட்களை சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள. இது வாழ்நாளைக் குறைக்கும்.

பிராய்லர் கோழிக்கறி சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். இதற்கு பதில் மீன் அல்லது ஆட்டுக்கறி, நாட்டுக்கோழி சாப்பிடுங்கள்.

மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்பு சுக்குக் காபி சாப்பிடுவது மிகவும் நல்லது.

உண்ட உணவு முழுமையாகச் செரிக்கும் முன்பு திட உணவு சாப்பிடக் கூடாது.

பாதாம், முந்திரி, உலர்பழம், பழங்கள், கீரைகள், கிரின் டீ, கடலை மிட்டாய், எள் உருண்டை, பனைவெல்லம் ஆகியவற்றை நாள்தோறும் சாப்பிடுவது நல்லது.

முக்கியமாக சாப்பிடும் உணவுக்கேற்ற உடல் உழைப்பு இருப்பது அவசியம். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் சர்க்கரை நோய் வருவதற்கான சாத்தியங்கள் குறைவு என்பதை அறிவது அவசியமாகும்.

வெங்காயத்தை பாதத்தில் வைத்து தூங்கினால் என்ன நடக்கும் தெரியுமா?

28574 total views
loading...