உயிரை பறிக்கும் கொடிய புற்றுநோய் செல்களை உடலில் பரவ விடாமல் அடியோடு வேரறுக்கும் அற்புத உணவுகள்! இனி தினமும் சாப்பிடுங்க..?

Report
1093Shares

உலகில் இதய நோய்க்கு அடுத்தப்படியாக மக்கள் அவஸ்தைப்படும் ஒரு நோய் தான் புற்றுநோய். இத்தகைய புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகை புற்றுநோயும் ஒவ்வொரு விதமான அறிகுறிகளை வெளிக்காட்டும்.

அந்த அறிகுறிகள் அனைத்தும் சாதாரணமாக நாம் சந்திக்கும் பொதுவான பிரச்சினைகள் போன்று தான் இருக்கும். அதை ஆரம்பத்திலேயே கவனித்து, முறையாக சிகிச்சை பெற்று வந்தால், புற்றுநோயினால் ஏற்படும் மரணத்தைத் தவிர்க்கலாம்.

ஆனால் புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து ஒருசில உணவுகள் நம்மைப் பாதுகாக்கும் என்பது தெரியுமா? ஆம், நாம் உண்ணும் சில உணவுகள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

உங்களுக்கு அந்த உணவுகள் எவையென்று தெரிந்து கொள்ள ஆசையா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.

கடுகு

தாளிக்கப் பயன்படுத்தும் கடுகு, புற்றுநேயைத் தடுக்கும். சமீபத்திய ஆய்வில் கடுகில் பித்தப்பை புற்றுநேரயத் தடுக்கும் திறன் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு கடுகில் உள்ள டீசோதியோசையனேட்டுகள் தான் முக்கிய காரணமாகவும் சொல்லப்படுகிறது.

எலுமிச்சை

எலுமிச்சையில் உள்ள பெக்டின் மற்றும் லெமோனாய்டுகள் புற்றுநோய் செல்களை அழிக்கும் சத்துக்களாகும். எனவே தினமும் எலுமிச்சை ஜூஸ் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். இதனால் வாய், தொண்டை, வயிற்று புற்றுநோயின் அபாயம் குறைவதாக ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இஞ்சி

பழங்காலம் முதலாக இஞ்சி பல நோய்களைக் குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. இஞ்சியையும் தேனையும் ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால், புற்றுநோய் வருவது தடுக்கப்படும். முக்கியமாக இஞ்சி ஆண்களைத் தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோயை எதிர்க்க உதவும்.

மஞ்சள்

மசாலாப் பொருட்களுள் ஒன்றான மஞ்சளும் புற்றுநோயைத் தடுக்க உதவும். இதற்கு மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் உட்பொருள் தான் முக்கிய காரணம். சில ஆய்வுகளில் மஞ்சளில் உள்ள சக்தி வாய்ந்த புற்றுநோயை எதிர்க்கும் பண்புகள் இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

loading...