சூடேற்றி சாப்பிட்டால் நஞ்சாக மாறும் சுவையான உணவுகள்!

Report
270Shares

உணவு என்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான ஒன்று. அன்றைய நாளின் ஒட்டுமொத்த ஆற்றலுக்கும் ஆதாரமாய் அமைவது காலை உணவுதான்.

நாம் சாப்பிடும் போது ஆரோக்கியமான முறைகளை பின் பற்ற வேண்டும். ஒருவேளை சமைத்த உணவை மறுவேளை சாப்பிடும் போது சூடேற்றி சாப்பிடுவது நல்லதல்ல.

குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களை சமைத்தப் பின், மீண்டும் சூடேற்றி சாப்பிட்டால், அந்த உணவுகளில் உள்ள சத்துக்கள் நீங்கி, அந்த உணவு நஞ்சாக மாறிவிடும் என ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க பதப்படுத்தும் கெமிக்கல்கள் இருக்கும். இந்த இறைச்சியை அடிக்கடி சூடேற்றி சாப்பிட்டால், அது உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும்.

சில சமயம் உடலினுள் எதிர் விளைவுகளை உண்டாக்கி, கொடிய புற்றுநோய் தாக்கத்தை கூட ஏற்படுத்தலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பீட்ரூட்

பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் அதிகம் உள்ளது. இந்த பீட்ரூட்டை அடிக்கடி சூடேற்றி சாப்பிட்டால், அது நஞ்சாக மாறிவிடும். பீட்ரூட் சேர்க்கப்பட்டுள்ள எந்த ஒரு பொருளை சூடேற்றினாலும், அது கார்சினோஜெனிக் பண்புகளை வெளியிடும். இந்த கார்சினோஜெனிக் பண்புகள், புற்றுநோய் மற்றும் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தலாம்.

முள்ளங்கி

முள்ளங்கியில் நைட்ரேட்டுகள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இதை ஒருமுறைக்கு பலமுறை சூடேற்றும் போது, அது நஞ்சாகி, உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். முக்கியமாக நைட்ரேட்டுகள் நைட்ரைட்டுகளாக மாறி, உடலினுள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தூண்டிவிடும். எனவே முள்ளங்கியை ஒருமுறை சமைத்த பின் சூடேற்றாதீர்கள்.

செலரி

செலரியில் நைட்ரேட் அதிகளவு உள்ளது. இதனை ஒருமுறை சமைத்த பின் மீண்டும் சூடேற்றினால், அந்த நைட்ரேட் நைட்ரைட்டுகளாக மாறி நஞ்சாகிவிடும். பெரும்பாலும் செலரி சூப்புகளில் தான் சேர்க்கப்படும். அப்படி சூப் தயாரிக்கும் போது அதில் செலரி சேர்த்திருந்தால், அதை உடனே குடியுங்கள். ஒருவேளை குடிக்க முடியாவிட்டால், மீண்டும் சூடேற்றுவதற்கு முன்பு சூப்பில் இருந்து செலரியை நீக்கிவிட்டு, சூடேற்றி குடியுங்கள்.

பசலைக்கீரை

பச்சை இலைக் காய்கறிகளுள் ஒன்றான பசலைக்கீரையை சமைத்த பின் மறுபடியும் சூடேற்றி சாப்பிடக்கூடாது. பசலைக்கீரையில் நைட்ரேட் உள்ளது. இதை மீண்டும் சூடேற்றும் போது, அது புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜெனிக் பண்புகளை வெளியிடும். அதோடு, அதில் உள்ள இரும்புச்சத்து ஆக்ஸிஜனேற்றம் அடைந்து, ப்ரீ ராடிக்கல்களை உருவாக்கி, நோய்களை ஏற்படுத்தும்.

சாதம்

சமைக்காத அரிசியில் ஃபுட் பாய்சனை உண்டாக்கும் பாக்டீரியா வித்துக்கள் இருப்பதாக FSA கூறுகிறது. இத்தகைய அரிசியை சமைக்கும் போது, அந்த வித்துக்கள் அழியாமல் உயிருடன் தான் இருக்கும்.

சமைத்த எஞ்சிய சாதத்தை அறை வெப்பநிலையில் வைத்திருக்கும் போது, அதில் உள்ள வித்துக்கள் பெருக்கமடைந்து, ஃபுட் பாய்சன் ஏற்பட்டு வாந்தி அல்லது வயிற்றுப் போக்கை உண்டாக்கும். அதோடு, இந்த சாதத்தை மீண்டும் சூடேற்றும் போது, அதில் உள்ள வித்துக்கள் அழியாமல் தான் இருக்கும். ஆகவே சாதத்தை சமைத்தால், அதை அந்த வேளையிலேயே சாப்பிட்டுவிடுங்கள். எக்காரணம் கொண்டும் மீண்டும் சூடேற்றி சாப்பிடாதீர்கள்.

காளான்

காளானை சமைத்தால், சமைத்த அப்பொழுதே சாப்பிடுங்கள். காளானில் புரோட்டீன்கள் அதிகம் உள்ளது. இதை மீண்டும் மீண்டும் சூடேற்றும் போது, அதில் உள்ள புரோட்டீன்கள் உடைக்கப்படும். இதனால் செரிமான மண்டலம் பாதிக்கப்படும் மற்றும் காளானை மீண்டும் சூடேற்றி சாப்பிடும் போது, அது உடலில் டாக்ஸின்களை உற்பத்தி செய்யும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கில் பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி6 போன்றவை அதிகளவில் உள்ளது. உருளைக்கிழங்கை ஒருமுறை சமைத்த பின் மீண்டும் சூடேற்றும் போது, அது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இந்த பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்க, சமைத்த உருளைக்கிழங்கை அப்போதே சாப்பிட்டுவிடுங்கள்.

முட்டை

முட்டையில் வளமான அளவில் புரோட்டீன்கள் உள்ளது. எப்போதும் வேக வைத்த முட்டையை மீண்டும் மீண்டும் சூடேற்றி சாப்பிடாதீர்கள். இது உடல் ஆரோக்கியத்தை மிகவும் மோசமானதாக்கும். வேக வைத்த முட்டையை உடனே சாப்பிடுங்கள். ஆனால் மீண்டும் சூடேற்றி சாப்பிடாதீர்கள், வேண்டுமெனில் குளிர்ந்த நிலையில் கூட சாப்பிடுங்கள். ஏனெனில் பொதுவாக புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவுகளில் நைட்ரஜென் அதிகளவில் இருக்கும். சூடேற்றும் போது, அது ஆக்ஸிஜனேற்றமடையும் வாய்ப்புள்ளது.

சிக்கன்

சிக்கன் குழம்பு அல்லது சிக்கன் சமையல் எதையாவது சமைத்தால், அதை எப்போதும் அடிக்கடி சூடேற்றி சாப்பிடாதீர்கள். சிக்கனில் புரோட்டீன் அதிகளவில் உள்ளது. இதை அதிகமாக சூடேற்றி சாப்பிடும் போது, சிக்கனின் தன்மை மாறிவிடும். இதனால் செரிமான மண்டலத்தில் இடையூறு ஏற்பட்டு, கடுமையான செரிமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

loading...