ஒரு முழு கோழி இறைச்சியை குளிர்சாதன பெட்டியில் இத்தனை வருடங்கள் வைத்து பயன்படுத்த முடியுமா? ஷாக் ஆகாம படிங்க...!

Report
377Shares

பொதுவாக உணவு பொருட்கள் மலிவான விலையில் கிடைக்கின்றது என்றும் நிறைய வாங்கி விடுகின்றோம்.

ஆனால் அதை எத்தனை நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்ற அறிவு நம்முள் இருப்பதில்லை.

உணவு பொருட்களை வாங்குவதை விட அவற்றை எப்படி பராமரிப்பது என்ற அறிவே மிகவும் தேவையானது.

பூச்சி பிடித்த அல்லது காலாவதியான உணவுகளை ருசியாக சமைத்து கொடுப்பதால் நம் வீட்டு மக்களுக்கு நாம் விஷத்தை சமைத்து கொடுப்பது போன்றதாகும்.

சிலர் உணவு பொருட்களை குளிர்சாதன பெட்டியில் வைத்தாலோ உறைய வைத்தாலோ போதுமானது என்று நினைத்து பல நாட்களுக்கு குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்துகின்றனர்.

ஆனால் அதுவும் கெடுதியானது என்பதை அறிவதில்லை. குளிரூட்டப்பட்ட உணவேயானாலும் அதற்கும் சில விதிகள் உண்டு. குறிப்பிட்ட நாட்களுக்குள் அவற்றை பயன்படுத்தி விட வேண்டும்.

குளிர்சாதன பெட்டியை நிரப்புவதில் கவனம் கொள்ளாமல், அதில் வைக்கும் உணவுகளை சரியான நேரத்தில் பயன்படுத்தும் அறிவை வளர்த்து கொள்ள வேண்டும்.

இறைச்சி, கடல் உணவு போன்றவறை மிகவும் கவனாமக சமைக்க வேண்டும். அதோடு அவற்றை பாதுகாப்பதில் அதை விட கவனம் தேவை. அவற்றை வாங்கிய நாளில் இருந்து குறிப்பிட்ட நாட்களுக்குள் உண்ண வேண்டும்.

இல்லையென்றால் உணவு விஷமாக மாறி பல்வேறு உபாதைகள் நேரும் என்பதை மறக்கக்கூடாது. அப்படி நாள் கடந்து விட்டால் கண்ணை மூடி கொண்டு தூக்கி வீச வேண்டும்.

ஒரு முழு கோழி இறைச்சியை குளிர்சாதன பெட்டியில் இரண்டு நாள் வரை வைத்து பயன்படுத்தலாம்.

அதையே உறையவைத்தால் ஒரு வருடத்திற்கு வைத்து பயன்படுத்தலாம். ஆனால் அதையே துண்டு போட்டு உறைய வைத்தால் ஒன்பது மாதத்திற்குள் பயன்படுத்த வேண்டும்.

சமைக்காத கோழி இறைச்சியை கழுவ கூடாது என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா? ஏனெனில் அதில் இருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் பாக்டீரியாவானது மற்ற உணவுகளுக்கும், சமையல் தளத்திலும் பரவும் வாய்ப்புள்ளது.

சூடு மட்டுமே இவ்வகை பாக்டீரியாக்களை அழிக்க முடியும். வெப்ப நிலை அளவில் 165 டிகிரி அளவிலான வெப்பநிலை கோழி இறைச்சிக்கான குறந்தபட்ச வெப்ப நிலையாகும்.

loading...