நீரிழிவு நோயாளிகளே இதை தினமும் சாப்பிடுங்கள்! அப்புறம் பாருங்க அதிசயம் நடக்கும்

Report
577Shares

நீரிழிவு என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் தாக்குவது இல்லை. இது உடலில் அனைத்து பகுதியையும் தாக்கும்.

அதிலும் இரத்தத்தில் அதிக அளவில் சர்க்கரையானத இருக்கும் போது, இந்த நோயானது சிறுநீரகம், கண்கள் மற்றும் இதயம் போன்றவற்றையும் பாதிக்கும்.

எனவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், அசாதாரணமாக இருந்துவிடாமல், உணவில் சற்று கட்டுப்பட்டுடன் இருப்பது நல்லது.

இப்போது நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

நட்ஸ்

உணவுகளிலேயே நட்ஸ் மிகவும் சிறந்த உணவு. இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை அதிக அளவில் நிறைந்துள்ளன. அதுமட்டுமின்றி இதில் உள்ள சில கொழுப்புகள் அளவுக்கு அதிகமாக இன்சுலின் சுரப்பதைக் கட்டுப்படுத்துகின்றன.

பீன்ஸ்

பீன்ஸில் புரோட்டீன் சொல்லமுடியாத அளவு நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், பொட்டாசியம், மக்னீசியம் அதிகம் உள்ளது. இந்த சத்துக்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் முக்கியமானது.

குறைந்த கொழுப்புள்ள தயிர்

நிறைய பேருக்கு பால் என்றால் பிடிக்காது. எனவே அதற்கு பதிலாக சாப்பிடக்கூடிய சிறந்த உணவுப் பொருள் என்று சொன்னால் அது தயிர் தான். ஏனெனில் பாலுக்கு அடுத்தப்படியாக கால்சியம் அதிகம் உள்ள உணவுப் பொருள் தயிர் தான். எனவே தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு தயிரை உணவில் சேர்த்து வந்தால், உடல் எடை குறைவதோடு, இன்சுலின் அளவும் சரியாக சுரக்கும்.

மீன்

மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. அதே சமயம் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண் பார்வையில் குறைபாடு இருக்கும். எனவே அதனை சரிசெய்ய மீன் சரியாக இருக்கும். இதனால் பார்வை பாதுகாக்கப்படுவதோடு, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிப்பதும் தடைபடும்.

பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகளில் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் கால்சியம் அதிகமாக இருக்கும். இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்துமே நீரிழிவு நோயாளிகளுக்கு தேவையான சத்துக்களே ஆகும்.

நவ தானியங்கள்

நவ தானியங்களில் காம்ப்ளக்ஸ் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இனிமேல் சாதாரண அரிசிக்கு பதிலாக ப்ரௌன் அரிசியையும், சுத்திகரிக்கப்பட்ட மாவிற்கு பதிலாக முழு கோதுமை மாவையும் பயன்படுத்துவது நல்லது.

பாகற்காய்

பாகற்காய் நன்மைகள் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். அதிலும் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் கீரையை விட அதிக அளவில் கால்சியம் சத்துக்களும், இரும்புச்சத்து மற்றும் போதுமான அளவு பீட்டா கரோட்டீனும் உள்ளது. சொல்லப்போனால், இதை சிறந்த உணவு என்பதை விட, சிறந்த மருந்து என்று சொல்லலாம்.

21465 total views