இலங்கைக்கு சென்றால் இதையெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க! தமிழர்களின் அப்பம் முதல் ரொட்டி வரை முழு விபரமும் உள்ளே...

Report
582Shares

இந்து சமுத்திரத்தின் முத்தான இலங்கை தன் எழிலில் மட்டுமன்றி தன் உணவுக் கலாசாரத்திலும் ஒரு தனித்துவத்தை கொண்டுள்ளது.

கலாசாரம் நாட்டுக்கு நாடு வித்தியாசமானதாகும். இலங்கை பொருத்த வரையில்கூட ஒரு தனிப்பட்ட கலாசாரமும் நாகரிகமும் உண்டு. இவ்வாறே உணவுகள் தொடர்பாகவும் ஒரு தனிப்பட்ட கலாசாரம் உண்டு.

பௌத்தம், இஸ்லாம், இந்து மற்றும் கிறிஸ்தவம் ஆகிய மதங்களை கொண்ட இலங்கையில் ஒவ்வொரு மதமும் தனக்கென்ற ஒரு உணவு பண்பாட்டை பின்பற்றி வருகிறது.

பாற்சோறு, தேங்காய் சம்பல், சோறும் கறியும், தேங்காய் ரொட்டி, தேங்காய் புட்டு, அப்பம் ஆகியவை அவற்றுடன் உள்ளடங்கும்.

பிரதான உணவு வகைகள்
சோறு மற்றும் கறி

இலங்கையின் பிரதான உணவாக வேக வைத்த அரிசி மற்றும் ஓர் மாமிசம் மற்றும் மரக்கறிகள், கீரை வகைகள் கருதப்படுகிறது.

மேலும் இரசணையை அதிகரிக்க சட்னி, தேங்காய் சம்பல், மாசி சம்பல் போன்றவைகள் உள்ளடக்கப்படும்.

அத்துடன் இலங்கையின் பிரதான ஓர் ஊதியமும் நெட்பயிர்ச்செய்கையே.

பாற்சோறு

பாற்சோறானது அரிசி, தேங்காய் பால் மற்றும் உப்பு கொண்டு சமைக்கப்படும். இது பிரதானமாக காலை உணவாக உட்கொள்ளப்படும். அத்துடன் பௌத்த பாரம்பரியத்தின் படி சில விசேட நிகழ்ச்சிகளின் போதும் உட்கொள்ளப்படும். உதாரணமாக சிங்கள தமிழ் புத்தாண்டு மற்றும் பிறந்த நாட்கள் போன்று.

அத்துடன் இது ‘லுணுமிரிஸ்’ எனப்படும் வெங்காயம் மற்றும் கொச்சிக்காய் கொண்டு தயாரிக்கப்படும் சம்பலுடன் பரிமாறப்படும்.

கொத்து

கொத்து எனப்படுவது பாராட்டா மற்றும் முட்டை, மாமிசம், மரக்கறி மற்றும் பாற்கட்டி கொண்டு தயாரிக்கப்படும் ஓர் உணவாகும். இலங்கையின் கிழக்கிலே உள்ள மட்டக்களப்பிலே அறிமுகம் செய்யப்பட்டது என நம்பப்படுகிறது.

இது நருக்கக்ப்பட்ட ரொட்டி எனவும் அழைக்கப்படும்.

அப்பம்

அப்பம் அரிசிமா, தேங்காய் பால் கொண்டு தயாரிக்கப்படும் ஓர் மென்மையான உணவாகும். இது முட்டை அப்பம், பால் அப்பம் மற்றும் பாணி அப்பம் என பலவகைகளை உள்ளடக்கியுள்ளது.

இடியப்பம்

இடியப்பம் அரிசி மா அல்லது கோதுமை மா உடன் வெந்நீர் கலந்து தயாரிக்கப்படும் ஓர் உணவாகும்.

புட்டு

புட்டு ஆனது உருளை வடிவான தேங்காய் மற்றும் சோறு கலந்து செய்யப்படும் ஒரு உணவாகும்.

ரொட்டி

வட்டவடிவமான அரிசி மா அல்லது கோதுமை மா கலந்து தேங்காயுடன் செய்யப்படும் ஒரு உணவாகும்.

தேங்காய் சம்பல்

தேங்காய் சம்பலானது தேங்காய், வெங்காயம், கொச்சிக்காய், தேசிக்காய் கொண்டு தயாரிக்கப்படும்.

இதுவானது பல பிரதான உணவு வேலைகளுடன் உட்கொள்ளப்படும். உதாரணமாக சோறு, இடியப்பம்.

இனிப்பு பண்டங்கள்

இலங்கையில் மிகவும் பிரபல்யமான இனிப்பு பண்டமாக ‘கெவும்’ எனப்படும் பலகாரம் கருதப்படும். இது அரிசி மா, பாணி கலந்து பொறித்து செய்யப்படும் ஒரு பண்டமாகும்.

இதுவானது பல வகைகளை உள்ளடக்கியுள்ளது. உதாரணமாக ‘முங் கெவும்’, ‘கொண்ட கெவும்’ போன்றவை.

மேலும் சில விசேட பண்டங்கள்

 • அலுவா – வைரக்கல் வடிவான (Diamond Shape) அரிசி மா கொண்டு தயாரிக்கப்படும்.
 • கொக்கிஸ் – அரிசி மா மற்றும் தேங்காய் பால் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு தின்பண்டமாகும்.
 • கலு தொதொல் – ஒரு திண்ம உணவு தேங்காய் பால், அரிசி மா மற்றும் கருப்பட்டி கொண்டு தயாரிக்கப்படும்.
 • வாட்டலாபம் – முஸ்லிம்களிடம் பிரசித்தி பெற்ற இது முட்டை, தேங்காய் பால், கருப்பட்டி கொண்டு தயாரிக்கப்படும்.
 • தல குளி – எள்ளு மற்றும் கருப்பட்டி கொண்டு தயாரிக்கப்படும்.
 • கிரி டொபி – பால் மற்றும் சீனி, கஜூ போன்றவை கொண்டு தயாரிக்கப்படும்.

சில பாணி கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு பண்டங்கள்

 1. உந்து வலழு – மத்திய மாகாணத்தை சேர்ந்த மாத்தளை பகுதியில் பிரசித்தி பெற்ற இது உளுந்து மற்றும் பாணி கொண்டு தயாரிக்கப்படும்.
 2. அக்கலா – அரிசி மற்றும் பாணி கொண்டு தயாரிக்கப்படும் உருண்டை வடிவான ஓர் உணவு.
 3. வெளி தலப – அரிசி மா மற்றும் பாணி கொண்டு தயாரிக்கப்படும்.
 4. ஆஸ்மி – அரிசி மா மற்றும் ‘தவுல் குருந்து’ எனப்படும் ஓர் இலையின் சாறு கலந்து தயாரிக்கப்படும்.

சில சிற்றுண்டிகள்

 • வடை – பருப்பு வடை, உளுந்து வடை, இறால் வடை, நண்டு வடை
 • பட்டிஸ், கட்லட், ரோல்ஸ், கிரி ரொட்டி – மரக்கறி மற்றும் ஓர் மாமிசம், முட்டை கொண்டு மத்தியில் நிரப்பப்படும் சில சிற்றுண்டிகள்.

குடிபான வகைகள்

 • பலூடா – பலூடா சிரப், ஐஸ் கிரீம், ஜெலி போன்றவை உடன் பரிமாறப்படும்.
 • பழங்கள் கொண்டு தயாரிக்கப்படுபவை – பப்பாளி ஜூஸ், நன்னாரி, மாம் பழ ஜூஸ்
 • தேநீர்

18126 total views
loading...