இந்த ஆபத்தான நோய்கள் உங்களுக்கு இருக்கா? அப்போ பூண்டு சாப்பிடாதீங்க! உயிரை பறிக்கும்

Report
321Shares

பல உடல்நல பயன்களை கொண்டுள்ள எளிய மூலப்பொருளான பூண்டு இல்லாமல், தமிழர்களின் உணவுகள் முழுமை அடையாது.

மிகவும் திடமானதாகவும், கசுப்புத்தன்மையுடனும் இருந்தாலும் கூட, அது சேர்க்கப்படும் உணவில் அதீத சுவை மணம் கூடும்.

அதேப்போல் அதன் மருத்துவ குணங்களைப் பற்றி குறிப்பிடாமல், பூண்டை பற்றிய விளக்கம் நிறைவு பெறாது.

நினைவிற்கு எட்டாத காலம் முதல், பல வித நோய்கள் மற்றும் மருத்துவ நிலைகளை தடுக்கவும், அதற்கு சிகிச்சை அளிக்கவும், இந்த அதிசய மூலிகை மருந்தாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

என்னதான் அற்புத மருத்துவ பொருளாக பூண்டு இருந்தாலும் சிலர் இதனை தவிர்க்க வேண்டும். இனி எந்த நோய் உள்ளவர்கள் பூண்டை தவிர்க்க வேண்டும் என்று பார்க்கலாம்.

  1. தீக்காயம் ஏற்பட்டவர்கள் பூண்டை அதிகமாக சாப்பிட்டால் உடம்பில் வீக்கம் போன்ற பல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
  2. கல்லீரல் கோளாறுகள் இருப்பவர்கள் பூண்டை உட்கொள்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்.
  3. இது கல்லீரல் கோளாறுக்கு எடுக்கும் மருந்துகளின் தாக்கத்தை குறைக்க செய்கிறது.
  4. வயிற்றுப்போக்கு கோளாறால் அவதிப்படும் நபர்கள் பூண்டை உணவில் சேர்த்துக்கொண்டால் குடல் இயக்கத்தை ஊக்கப்படுத்தி வயிற்றுப் போக்கை அதிகப்படுத்தும். சில சமயம் அதிகரிக்கும் பட்சத்தில் குழந்தைகளின் உயிர் பறிபோகும் நிலை கூட ஏற்படலாம்.
  5. கண் சார்ந்த நோய் மற்றும் கோளாறுகள் இருக்கும் நபர்கள் பூண்டை சேர்த்து உணவை சாப்பிட்டால் கண்களின் ஆரோக்கியத்தை கெடுக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளது.
  6. அறுவை சிகிச்சை செய்துக் கொள்ளப்போகும் நபர்கள் இரண்டு வாரத்திற்கு முன்னரே பூண்டை உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்த்து விடுங்கள்.
  7. பூண்டு இரத்த அழுத்தத்தை குறைக்கும் திறன் கொண்டுள்ளது. எனவே குறைந்த இரத்த அழுத்தம் இருக்கும் நபர்கள் பூண்டை தவிர்த்து விடுவது நல்லது.
you may like this vide
8594 total views