மீன் சாப்பிட்டால் மரணம் நிச்சயம்! ஆய்வாளர்கள் வெளியிட்ட தகவல்

Report
185Shares

மீன்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பது அனைவருக்குமே தெரியும்.

வாரம் ஒருமுறை தவறாமல் மீனை சேர்த்துக் கொள்ளுங்கள் என பல மருத்துவர்களும் பரிந்துரைக்கிறார்கள்.

ஏனெனில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் மீன்களில் ஏராளமான அளவில் உள்ளது.

அதில் முக்கியமான ஓர் சத்து தான் ஒமேகா-3 கொழுப்பு அமிலம். இந்த கொழுப்பு அமிலம் மற்ற உணவுப் பொருட்களில் இருந்தாலும் மீன்களில் வளமாக நிறைந்துள்ளது.

எனினும், அசைவ உணவுகளை அதிகம் எடுத்து கொண்டால் பல உடல் சார்ந்த கோளாறுகள் ஏற்படும். குறிப்பாக மீனில் சில மரணகரமான விஷியங்கள் உள்ளதென்றால் நம்புவீர்களா?

கடலில் அதிக பாதரச தன்மை கலந்துள்ளதாக ஆய்வாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

எனவே கடல் மீன்களை கர்ப்பம் அடைந்த பெண்கள் உண்டால் அவர்களின் கருவில் உள்ள சிசுவை அதிகம் பாதிக்கும்.

ஏனென்றால் பாதரசம் மிகவும் விஷத்தன்மை உடையது. மேலும் குழந்தைகள் பாதரசம் கலந்த கடல் நீரில் உள்ள மீன்களை சாப்பிடுவதால் சிறு வயதிலேயே ஊட்டச்சத்து குறைபாடு, கண் சார்ந்த பிரச்சினை, மூளை கோளாறு போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

நச்சு தன்மை கொண்ட இந்த மீன்களை உண்டால் உடலுக்கு பல்வேறு பிரச்சினைகள் வரக்கூடும்.

அதில் ஒன்றுதான் ஒவ்வாமை. கடல் மீன்களை சாப்பிடுவதால் புது புது வியாதிகள் உங்களை தேடி வரும்.

ஒவ்வாமை அதிகமாகி விட்டால் உடலிற்கு தீங்கு ஏற்படுத்தி, சுவாச பிரச்சினைகளை தரும். இதனால் சில சமையம் மரணம் கூட நிகழ வாய்ப்புள்ளது.

நச்சு தன்மைகான காரணம்

  • பெருகி வரும் மக்கள் தொகையால் இட பற்றாக்குறை ஏற்பட்டு நிலம், காடு போன்றவற்றை ஆக்கிரமித்து வசிக்கின்றனர்.
  • மேலும் அவர்களுக்கென்று பல தொழிற்சாலைகள் வருவதால் அவற்றின் கழிவுகள் வெளியேற்ற இடமின்றி ஆறு, ஏறி, குளம் ஆகியவற்றில் கலந்து கடைசியாக கடலில் சேரும். இதன் விளைவே கடல் முழுவதும் விஷத்தன்மையாக மாறுகிறது.
  • நச்சு தன்மை கொண்ட கடல் மீன்களை சாப்பிடுவதால் இந்த நோய்கள் உங்களுக்கு வரக்கூடும்.

1. ஆஸ்துமா

2. புற்றுநோய்

3. இதயம் சார்ந்த நோய்கள்

4. மன அழுத்தம்

5. நீரிழிவு

6. பார்வை குறைபாடு

7. மூளை நோய்கள்

8. குடல் கட்டிகள்

என்ன செய்ய வேண்டும்

மீன்கள் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நன்மை தரும். வைட்டமின் டி, புரத சத்துக்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை அதிகம் உள்ளதால் உடலுக்கு வலிமை தரும்.

அத்துடன் ஊட்ட சத்து குறைபாடுகள் வராமல் காக்கும். ஆனால் நஞ்சு கலந்த மீன்களை சாப்பிடுவதால் உயிரையே எடுத்துவிடும்.

சாப்பிடும் மீன் விஷ தன்மை உள்ளதா..? என்பதை உறுதி செய்து சாப்பிடுதல் மிகவும் நல்லது.

மேலும் அசைவ உணவுகளை காட்டிலும் சைவ உணவுகள் அதிகம் உண்பது உடலுக்கு அதிக நன்மை தரும். இவற்றை தினமும் சாப்பிட்டாலே போதும்.