இந்த உணவுகளை சாப்பிட்டால் கோமாவுக்கே போயிடுவீங்க? சிலவேளை உடனே உயிர் போய்விடும்!

Report
561Shares

இப்போதெல்லாம் வர கூடிய நோய்களுக்கு பேர் வைக்கவே ஒரு தனி குழு அமைக்க வேண்டிய அளவிற்கு நோய்களின் எண்ணிக்கையும், அதன் வீரியமும் அதிகமாகி உள்ளது.

இதற்கு முக்கிய காரணம் நாம் தினமும் உணவாக சாப்பிடும் பொருட்களிலும் உள்ளது. நாம் உண்ணும் ஒவ்வொரு உணவிலும் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஒரு குறிப்பிட்ட ரசாயனங்கள் இருக்கிறது.

இந்த உணவுகளை தவறான முறையில் சாப்பிட்டால் தான், ஆபத்தை விளைக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள். அவற்றில் சில உணவுகளும், அதன் நஞ்சு தன்மையால் ஏற்படும் பாதிப்பு பற்றியும் அறிந்து கொள்ளுங்கள்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கின் விஷம தண்டு மற்றும் இலைகளில் தான் இருக்குமாம். உருளைக்கிழங்கு பச்சையாக இருந்தால், அதில் க்ளைக்கோ

அல்கலாய்டு என்னும் விஷம் நிறைந்திருக்குமாம். அப்போது அதனை உட்கொண்டால், உடலின் சக்தியானது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, கோமா வரை கொண்டு செல்வதோடு, சில நேரங்களில் திடீரென்று இறப்பிற்கு வழிவகுக்கும்.

தக்காளி

தக்காளியிலும் க்ளைகோ அல்கலாய்டு என்னும் விஷமிக்க கெமிக்கல் நிறைந்துள்ளது. அதுவும் இது தண்டு மற்றும் இலைகளில் தான்

இருக்கும். ஒருவேளை அதன் தண்டு அல்லது இலையை சாப்பிட்டால், அது நரம்புதளர்ச்சியை உருவாக்குவதோடு, வயிற்று உப்புசத்தை அதிகரித்து இறுதியில் இறப்பை ஏற்படுத்திவிடும்.

ருபார்ப்

இந்த மூலிகை இயற்கையாகவே அதிகப்படியான விஷத்தைக் கொண்டிருக்கும். பொதுவாக இதன் வேரை சாப்பிட்டால், மலச்சிக்கல்

பிரச்சனை நீங்கும். ஆனால் இந்த மூலிகையின் இலையை சாப்பிட்டால், உடனே உயிர் போய்விடும்.

எல்டர்பெர்ரி

எல்டர்பெர்ரி மரத்தின் வேரில் அதிகப்படியான விஷம் நிறைந்துள்ளது. அதிலும் இந்த விஷம் உடலில் சென்றால் வயிற்றில் பெரும் பிரச்சனையை உண்டு பண்ணி, உயிருக்கு ஆபத்தையே விளைவிக்கும்.

23459 total views
loading...