இந்த ஒரு உணவை சாப்பிட்டு தண்ணீர் எதுவும் குடித்து விடாதீர்கள்! ஆபத்து நிச்சயம்? ஏன் தெரியுமா?

Report
595Shares

வறுத்த மக்காச் சோளம் அல்லது பூட்டா அற்புதமான சுவையோடு ஆரோக்கியமான சிற்றுண்டி விருப்பமாகவும் இருக்கிறது.

இருப்பினும், இதை உண்டவுடன் குடிநீரை உடனடியாக குடிப்பதால் பல்வேறு வகையான வயிற்றுக் கோளாறுகள் ஏற்படுமாம்.

நீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் இரைப்பைப் பிரச்சினைகள் மற்றும் வயிற்று வலிக்கும் இது வழிவகுக்கும்.

ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது?

தண்ணீருடன் மக்காச் சோளம் அல்லது சோளக்கருது ஒன்றாக உட்கொள்ளும் போது ​பலர் வாய்வு மற்றும் கடுமையான வயிற்று வலி ஏற்படுவதாக பலர் புகார் செய்துள்ளனர்.

சோளக்கருது உண்டவுடன் குடிநீரை குடிப்பதன் மூலம் ஜீரண நொதிகள் இயல்பிலிருந்து பெருமளவு மாற்றமடைகின்றன ,எனவே செரிமான வேகம் குறைகிறது.

சோளக்கருதில் உள்ள சிக்கலான கார்ப்ஸ் , ஸ்டார்ச் மற்றும் தண்ணீரின் நுகர்வு ஆகியவை வயிற்றில் உள்ள வாயுக்களை வெளியேற்றுவதற்கு வழிவகுக்கலாம்.

இதனால் வாய்வு , அசிடிட்டி மற்றும் கடுமையான வயிற்று வலி உருவாகும் என டாக்டர் கூறுகின்றனர்.

எவ்வளவு நுரம் கழித்து குடிக்கலாம்?

சிறந்த நேர இடைவெளி, குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் இருக்க வேண்டும் என்று வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர்.

இது தவிர, எலுமிச்சை சாறு பூசப்பட்ட மக்காச் சோளம் அல்லது சோளக்கருதைத் தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் எலுமிச்சை செரிமானத்தை எளிதாக்கும் மற்றும் ஒட்டுமொத்த செரிமானச் செயல்முறையையும் மென்மையாகவும் பயனுள்ளதாகவும் மாற்றும்.

மழைக்காலத்தில் பருவத்தில் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் நோய்கள் தாக்கும் வாய்ப்புகள் அதிகம். வறுத்த மக்காச் சோளம் அல்லது சோளக்கருது ஒரு சுவையான தெரு உணவாக இருந்தாலும், புதிய மற்றும் சூடானதை மட்டும் நுகருங்கள்.

இதில் அதிகபட்ச ஊட்டச்சத்து நன்மைகளைப் பெறுவதற்காக, உடனடியாக அதை உட்கொள்வது நல்லது .

நீண்ட காலமாக அதை சேமித்து வைத்து உபயோகித்தல் பாக்டீரியாத் தொற்றுக்களால் வயிறு தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

எனவே, அடுத்த முறை மழைக்காலத்தின் மகிழ்ச்சியை சுவையான இந்த மக்காச் சோளம் அல்லது சோளக்கருதைக் கொண்டு கொண்டாடும் தருவாயில் மேலே குறிப்பிடப்பட்ட விஷயங்களை மனதில் வைத்து வயிற்று அசௌகரியத்தில் இருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்.

24975 total views