பிறந்த நாளிற்கு கேக் வாங்குபவரா நீங்கள்!....குழந்தைகளின் உயிரை பறிக்கும் அபாயம் உள்ளது!

Report
99Shares

பிறந்த நாள் கொண்டாட்டங்களில் குழந்தைகளை மகிழ்விப்பதற்காக வழங்கப்படும் வண்ண கேக்குகளில் சுவையூட்டி என்ற பெயரில் போதைதரும் ரசாயனங்கள் கலக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

எத்தனை டிசைன்கள்... எத்தனை வண்ணங்கள்.... தெவிட்டும் அளவுக்கு இனிப்பு சுவை தான் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் தவிர்க்க முடியாத உணவு பொருளாக கேக்குகளை மாறிவிட்டது..!

சர்க்கரை கலந்தால் கூட தரமுடியாத இனிப்புக்காக கலக்கப்படும் சுக்ரோஸ் மற்றும் ரெட் 45, யெல்லோ 3,6,5 போன்ற பல வண்ண ரசாயனங்களை கலப்பது தெரிந்தே பலர் கேக்குகளை வாங்கி பயன்படுத்துவது இன்றும் தொடரத்தான் செய்கிறது.

ஸ்பேஸ் கேக், வெல்வெட் கேக், பேச்ட்ரீஸ், கிரீம் கேக் என தங்கள் குழந்தைகள் விரும்பும் கேக்குகளை வாங்கிக்கொடுத்து அவர்களை புதிய போதை பழக்கத்துக்கு பெற்றோர்களே அடிமையாக்கி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர் ஊட்டசத்து நிபுணர்கள்..!

சில வகை கேக்குகளில் கலக்கப்படும் செராடனின், கேனபின் போன்ற ரசாயண கலவைகள் குழந்தைகளின் மூளையை துரிதமாக்கி அவர்களை போதை மருந்து பயன்படுத்தும் நபர்களை போல மாற்றுவதாகவும் தொடர்ந்து சாப்பிட்டால் குழந்தைகள் வன்முறையான மனநிலைக்கு மாறும் அபாயம் உள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

பார்ப்பதற்கு சிவப்பு நிற வெல் வெட் போன்று காட்சி அளிக்கும் இந்த கேக்கில் இத்தனை பாதிப்புகள் உள்ளதா ? என்று மக்கள் வியக்கும் அளவுக்கு கேக் உணவில் மஞ்சள், நீலம், சிகப்பு, வயலெட், பச்சை என பலவண்ண ரசாயனங்களை சேர்த்து அதனை குழந்தைகள் உண்ணுவதற்கு தகுதி இல்லாத பொருளாக மாற்றி வருகின்றனர் பேக்கரி கடைகாரர்கள்.

மூளையைத் தூண்டும் வேதிபொருட்கள் மட்டுமன்றி பல வண்ண ரசாயன கலவைகளை கலந்து தயாரிக்கப்படும் அனைத்து வகை கேக்குகளும் உண்ண தகுதி இல்லாதவை என்று சுட்டிக்காட்டுகிறார் குழந்தைகள் நல மருத்துவர் பாலமுருகன்.

அந்தவகையில் கேக்குகளில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால் உடல் பருமன், செரிமான கோளாறு, சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என எச்சரிக்கின்றனர். கேக்குகளில் மேல் பூசப்பட்டுள்ள பல வண்ண கிரீம்கள் குடல் பகுதியில் நிரந்தரமாக ஒட்டிக்கொள்ளும் தன்மை கொண்டது .மேலும் மூளையை தூண்டும் வேதிப்பொருட்களால் குழந்தைகள் குறிப்பிட்ட கேக்கின் சுவைக்கு அடிமையாகும் நிலை ஏற்படும் அப்போது கூட பெற்றோர் விழித்து கொள்ளாவிட்டால் குழந்தைகளின் உடல் நலம் மெல்லக் கெடும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்

குழந்தைகள் விரும்பி உண்ணும் பொருட்களிலும் கவர்ச்சிக்காக சேர்க்கப்படும் இது போன்ற ரசாயனங்கள் அதனை சாப்பிடுபவர்களின் உடல் நலனை மெல்ல கொல்லும் விசமாகவே மாற்றி விடுகிறது என்பதே கசப்பாண உண்மை..! உணவில் பல ஆபத்துக்கள் இருந்தாலும் அதனை தேர்தெடுக்கும் நமது சாமர்த்தியமே நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் என்கின்றனர் மருத்துவர்கள்.

3410 total views