சமையல் வல்லுனர்கள் கூறிய சில ரகசிய டிப்ஸ்.. இல்லத்தரிசிகளே இது உங்களுக்காக

Report
634Shares

ஒரு சிறந்த சமையல் கலை வல்லுனர் ஆக இருக்கும் அனைவரும் அவர்களுக்கு தெரிந்த சமையல் மந்திரங்களை ரகசியமாக வைத்திரப்பதோடு, அதனை அவர்களது மாணவர்களுக்கு மட்டும் தான் கற்றுக்கொடுப்பர். எனினும் உங்களுக்காக சில சமையல் டிரிக்குகளை அவர்களிடமிருந்து கண்டுபிடிக்க முடிந்தது.

இல்லத்தரசிகளே சமையல் கலை வல்லுனர்களின் உணவைப் போலவே உங்களது உணவும் ருசிக்க வேண்டுமா? உலகம் முழுவதும் இருந்து சிறந்த சமையல் கலை வல்லுனர்களின் சமையல் தந்திரங்களை சேகரித்து இங்கு உங்களுக்காக கொடுத்துள்ளோம்.

இறைச்சிகள் வறுக்கும் போது

நீங்கள் குளிர்சாதனப்பெட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட இறைச்சியை உடனே வருக்ககூடாது. அதனை 1 அல்லது 2 மணி நேரத்திற்க்கு முன்னறே வெளியே வைத்துவிடுங்கள். அப்படி செய்யும்போது உங்கள் இறைச்சி முழுமையாக வேகுவதோடு, சுவையும் அதிகமாக இருக்கும். இப்போது நீங்கள் மாமிசத்தை வேக வைத்து, ஒரு பெரிய உணவைப் பெறுவீர்கள். அதேபோல் இறைச்சியில் ஈரப்பதம் இருந்தால் அது மொருமொருபாக இருக்காது.

கோழி அல்லது பன்றிக்கறி வருக்க அதிக நேரம் எடுக்கும். இதை தவிர்க்க. இதை தவிர்க்க, பல ஐரோப்பிய சமையல்காரர்களுக்கு ஒரு எளிய தந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் 3 கப் தண்ணீர் எடுத்து, அதில் ¼ கப் உப்பு மற்றும் ¼ கப் சர்க்கரை சேர்த்து அந்த கலவையை உங்கள் இறைச்சியின் மேல் தரவி ஃபிரிட்ஜில் வைத்து சமைக்கும் 1 மணி நேரத்திற்கு முன் அதனை வெளியில் எடுத்து பயன்படுத்திபாருங்கள்.

இப்படி வைக்கப்படும் இறைச்சிகள் 8 மணி நேரத்திற்கு மேலோ அல்லது அறைமணிக்கு குறைவாகவோ வைத்து பயன்படுத்தாதீர்கள்.

மசாலாக்கள்

மசாலக்கள் தான் உங்களது உணவிற்கு சுவையளிக்கிறது. கருப்பு மிளகு, சீரகம் போன்ற பொருட்களை சேர்க்கும்போது அதனை கடாயில் சற்று வருத்துவிட்டு பிறகு அறைத்து உங்கள் உணவில் சேர்த்தால் உணவின் சுவை மேலும் அதிகரிக்கும்.

மீன் கிரில் பொன்நிறமாக வர

மீன்களில் கிரில் செய்ய விரும்புகிறீர்களா? ஒரு சுவையாக பொன்நீறமாக மீன் வேண்டுமென்றால் மயோனஸ் மற்றும் கொஞ்சம் உப்பை மீனின் மேல் தடவி பின் கிரில் செய்துபாருங்கள். உங்கள் மீன் பொன்நீறமாக வரும்.

மீனின் மீது குறைந்தபட்ச மசாலாப் பொருள்களைப் பயன்படுத்தி சமைக்கவும். இறுதியாக சில சொட்டு எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிட்டு பாருங்கள்.

உருளைகிழங்கு

வேகவைத்த உருளைக்கிழங்கை மசிக்கும்போது அவற்றை ஒரு சூடான பான்னில் போட்டு உலர்த்த வேண்டும். ஆனால் அந்த சூட்டால் உருளை வருப்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உருளைக்கிழங்கை இப்படி உலர்த்தி அறைத்தால் நல்ல க்ரீம் போன்று கிடைக்கும் மேலும் ஒரு சிறிய ரகசியம்: அப்படி உலர்த்துபோதும், அறைக்கும்போதும் சிறிதளவு பாலை சேர்த்துக்கொள்ளுங்கள்.

சிறந்த க்ரிம் சூப்

காய்கறி கிரீம் சூப் தொடங்குவதற்கு முன், அனைத்து காய்கறிகளையும் தனித்தனியாக ஆலிவ் எண்ணெயுடன் வறுக்கவும். வறுத்த காய்கறிகளில் சிறிதளவு சர்க்கரைகளை சேர்த்தால், சுவை அதிகரிக்கும். டிஷ் நேர்த்தியான மற்றும் சுவையாக இருக்கும்.

பான்கேக்

சிறந்த பான்கேக்கள் வேண்டுமென்றால் உங்களது எந்த ரெசிப்பியானாலும் அதனுடன் 2 தேக்கரண்டி கிரீம் சேர்த்து செய்யுங்கள். இப்படி செய்வதன் மூலம் உங்கள் கேக்களில் அதிக சுவையாக இருக்கும்.

புளிப்பு தன்மை போக்க

உப்பை போலவே சக்கரையும் உங்களது எல்லா உணவுகளிலும் சேர்க்கலாம். உங்களது உணவில் புளிப்பு தன்மை இருந்தால் சிறிதளவு சக்கரையை சேர்த்து சமையுங்கள். இப்படி செய்தால் உங்கள் ரெசிப்பியின் சுவை மேலும் அதிகரிக்கும்.

27020 total views