இந்த உடற்பயிற்சியை இவர்கள் மட்டும் செய்ய வேண்டாம்!...

Report
125Shares

அடிவயிற்றில் உள்ள கல்லீரல், கணையம், சிறுநீரகம் போன்ற உறுப்புகளுக்கு போதிய ரத்த ஓட்டம் கிடைக்கவில்லையெனில் பாதிப்புகள் ஏற்பட தொடங்கும்.

அத்தகைய பாதிப்புகள் வராமல் தடுத்து அடிவயிற்று உறுப்புகளை பலப்படுத்த சலம்ப சர்வாங்கசானா பெரிதும் உதவுகிறது.

சலம்ப சர்வாங்கசானா செய்வது எப்படி?

முதலில் தரையில் படுத்துக் கொண்டு கைகளை தரையில் பதித்து நேராக படுத்து மூச்சை இழுத்து ஆழ்ந்து விட வேண்டும்.

பின் மெதுவாக அடிவயிற்றை உந்தியவாறு கால்களை வளைக்காமல் மேலே தூக்கி, கைகளை இடுப்பிற்கு முட்டு கொடுத்து இடுப்பு பகுதியையும் மேலே தூக்க வேண்டும்.

இந்நிலையில் கழுத்து, முதுகுப் பகுதி மட்டும் தரையில் இருக்க வேண்டும். இடுப்பிலிருந்து கால் வரை நேராக செங்குத்தாக நின்று ஆழ்ந்து மூச்சை விட வேண்டும்.

இதே நிலையில் சில நிமிடங்கள் இருந்து விட்டு மெதுவாக கால்களை இறக்கி, தரையோடு வைத்து பழய நிலைக்கு வர வேண்டும்.

பலன்கள்
  • அடிவயிற்றில் தசைகள் நன்கு வேலை செய்யும்.
  • கல்லீரல், கணையம் பகுதிகள் பலம் பெறும்.
  • ஜீரண சக்தி அதிகரித்து, மன அழுத்தம் குறையும்.
  • தூக்கமின்மை, ஆஸ்துமா, சுவாச பிரச்சனைகள் குணமாகும்.
குறிப்பு

உயர் ரத்த அழுத்தம், தலைவலி, கழுத்துவலி, முதுகுவலி இருப்பவர்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.

4610 total views
loading...