முடியின் நிறத்தை இழந்துவிட்டீர்களா?... நகத்தை இப்படி மட்டும் செய்தால் திரும்ப பெறலாம்!... அறிவியல் உண்மையின் அதிசயம்

Report
415Shares

மக்களிடையே பல்வேறு நம்பிக்கைகள் நிலவி வருகின்றன. அவ்வாறு ஒரு நம்பிக்கை விரல் நகங்களை ஒன்றோடொன்று தேய்ப்பது அடர்த்தியான, நீளமான மற்றும் உறுதியான முடியை வழங்கும். இதற்கு பின்னால் உண்மை இருக்கிறதா என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

விரல்களை ஒன்றோடொன்று தேய்ப்பது உங்கள் பல நல்ல பலன்களை வழங்குவதற்கு பல ஆதாரங்கள் இருக்கிறது. இது பல நூற்றாண்டுகளாக மக்களிடையே நிலவி வரும் ஒரு பழக்கமாகும். இவ்வாறு செய்வது வழுக்கை விழுந்த இடங்களில் கூட முடி வளர்வதாக கூறப்படுகிறது.

நகங்களை தேய்ப்பது அதிர்ஷ்டமா?

குழந்தையாக இருக்கும்போது மழை வரும்போது நாம் நகங்களை தேய்ப்பதை வழக்கமாக கொண்டிருப்போம். இவ்வாறு நகங்களை தேய்ப்பது முழுக்க முழுக்க ஒரு உடற்பயிற்சி ஆகும், அதேசமயம் இது அதிர்ஷ்டத்தின் அடையாளமாகும்.

முடி வளருமா?

விரல் நகங்களை ஒன்றோடொன்று தினமும் சில நிமிடங்கள் தேய்ப்பது அது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் இது முடியின் நிறத்தை தக்க வைப்பதுடன் முடியின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.

பாலயம்

விரல்களை இப்படி ஒன்றோடொன்று தேய்ப்பதற்கு பெயர் பாலயம் ஆகும். இதில் பால என்பதன் அர்த்தம் முடி மற்றும் அயம் என்பதன் பொருள் உடற்பயிற்சி ஆகும். இந்த பெயர் யோகா நிபுணர்களால் அதிகம் உபயோகப்படுத்தப்படுகிறது.

எப்படி வேலை செய்கிறது?

யோகா நிபுணர்களின் கருத்துப்படி விரல்களை ஒன்றோடொன்று தேய்க்கும்போது அதனால் உருவாகும் ஆற்றல் நமது உடலின் சக்கரங்களை சரி செய்கிறது. உடலில் ஏற்படும் ஆற்றல் சமநிலையின்மையை இது சரி செய்கிறது. இதனை பிரதிபலிக்கும் ஆற்றல் முறை என்றும் கூறுவார்கள்.

அறிவியல் காரணம்

சரியான பிரதிபலிக்கும் புள்ளியை தூண்டும்போது தீர்க்கரேகை ஆற்றலானது உடலின் பாதைகள் மூலமாக உடலின் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்லும். இதன் மூலம் அந்த இடங்களில் ஆற்றல் அதிகரிக்கும். விரல்களை உண்ரடொன்று தேய்ப்பது உச்சந்தலையில் தூண்டுதலை ஏற்படுத்துகிறது. இதனால் உங்கள் முடி வளர்ச்சி அதிகரிக்கிறது.

எப்படி செய்ய வேண்டும்?

விரல்களை ஒன்றோடொரு தேய்க்கும் இந்த பாலயத்தை வெறும் வயிற்றிலோ அல்லது சாப்பிட்டு இரண்டு மணி நேரத்திற்கு பிறகோ செய்ய வேண்டும். விரலை மடக்கி பாதி இருக்கும் நிலையில் வைத்து கொண்டு இரண்டு கைகளின் நகங்களையும் ஒன்றோடொன்று தேய்க்கவும். கட்டை விரலை தவிர்த்து மீதமிருக்கும் விரல்களின் நகங்களை 5 முதல் 10 நிமிடம் தேய்க்கவும்.

எத்தனை முறை செய்ய வேண்டும்?

இந்த பயிற்சியை ஒருநாளைக்கு இரண்டு முறை செய்யலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இதன் பலன்களை உடனடியாக எதிர்பார்க்க முடியாது. இது முழுமையாக வேலை செய்ய மூன்று அல்லது நான்கு மாதங்கள் ஆகும்.

யாரெல்லாம் செய்யக்கூடாது?

கர்ப்பிணி பெண்கள் இந்த பயிற்சியை செய்வதை தவிர்ப்பது நல்லது. நகம் மற்றும் அதனை சுற்றியிருக்கும் சருமத்தில் ஏதாவது பிரச்சினை இருந்தால் இந்த பயிற்சியை செய்வதை தவிர்க்கவும். ஏனெனில் இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.

12077 total views