20 நிமிடத்தில் 50 யோகாசனம் செய்து கலக்கிய ரஷ்யர்

Report
83Shares

சிவகங்கையில் ரஷ்யர்கள் 20 நிமிடங்களில் 50 யோகாசனம் செய்து அசத்தினர்.விவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு வொர்கவுட் வொண்டர்ஸ் மையம் சார்பில் சிவகங்கை சோழபுரம் ரமணவிகாஸ் மேல்நிலைப் பள்ளியில் தேசிய இளைஞர் தின விழா நடந்தது.

இதில் பெங்களூரு யோகாசன நிபுணர் விபுனாந்தம் முருகதாஸ் தலைமையில் 9 ரஷ்யர்கள் யோகா செய்தனர். அவர்கள் மயூராசனம், சர்வாங்சனம், சிரசாசனம் என 50 ஆசனங்களை 20 நிமிடங்களில் செய்தனர்.


விபுனாந்தம் முருகதாஸ் கூறியதாவது: பெங்களூரு கடப்பை சித்தர் குரு பரம்பரையை சேர்ந்த நாங்கள் யோகாவை உலகம் முழுவதும் பரப்பி வருகிறோம். ரஷ்யா, கஜகஸ்தான், பிரான்ஸ், அமெரிக்கா, மங்கோலியா, இங்கிலாந்து, ஸ்பெயின் போன்ற உலக நாடுகளில் உலக யோகா சித்தி மையத்தை ஏற்படுத்தியுள்ளோம்.


நான் 6 வயதில் இருந்தே 22 ஆண்டுகளாக பயிற்சி அளிக்கிறேன். பல ஆராய்ச்சிகளையும் செய்துள்ளேன்.ரஷ்யா நாட்டில் கசானில் உள்ள மையத்தை சேர்ந்த 9 பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள். யோகா மூலம் 4,448 நோய்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.


ரஷ்யாவில் யோகா மூலம் நோய்களை குணப்படுத்தியதால் பல ஆயிரம் பேர் பயிற்சியாளர்களாக சேர்ந்தனர். அவர்கள் யோகாவை உடற்பயிற்சி கலையாகவே பார்க்கின்றனர். மன அமைதி கிடைப்பதாக கூறுகின்றனர். யோகாவின் பிறப்பிடம் இந்தியா.


இதனால் ஒன்பது பேரும் யோகா குறித்து ஆய்வு செய்ய வந்துள்ளனர், என்றார். தொடர்ந்து சிலம்பாட்டம், உடற்பயிற்சி சாகசங்கள் நடந்தன.யோகா உடற்திறன் மேன்பாடு ஆசிரியர் நிமலன், பள்ளி தாளாளர் முத்துக்கண்ணன், நேருயுவ கேந்திரா ஒருங்கிணைப்பாளர் (ஓய்வு)ஜவஹர், சிவகங்கை சமஸ்தானம் மகேஸ்துரை பங்கேற்றனர்.

2683 total views