மயிரிழையில் உயிர் தப்பிய சிறுவன்; அனைவரும் பாராட்டு!

Report
1139Shares

நோர்வேயில் ஒரு சாலையைக் கடக்க முயன்ற சிறுவன் அவ்வழியால் அதிவேகமாக வந்த கனரக பாரவூர்தியிலிருந்து நூலிழையில் தப்பிய சம்பவம் ஒன்று இவ்வருடம் ஜுன் மாதம் நடந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த சம்பவத்தின் காணொளி அண்மைய நாட்களில் சமூக வலைத்தளங்கள் மற்றும் யூரியூப் போன்றவற்றிலும் அதிகமானோரால் பார்க்கப்பட்ட ஒன்றாகக் காணப்படுகிறது.

இதில் முக்கிடமான விடயம் யாதெனில், சிறுவன் வேகமாக வீதியக் கடக்க முற்பட்டாலும் அவ்வழியால் அதிவேகமாக வந்த குறித்த கனரக பாரவூர்தி சடுதியில் நிறுத்தப்படுகிறது. இதனால் வாகனத்தில் அடிபடாமல் குறித்த சிறுவன் தப்பியுள்ளார்.

குறித்த பாரவூர்தியைச் செலுத்திவந்த ஓட்டுநரின் மிகத்திறமையான செயற்பாட்டின்மூலமே குறித்த சிறுவன் பாதுகாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அனைவரும் அவ் ஓட்டுநரைப் பாராட்டிவருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

குறித்த காணொளியை இங்கே காணலாம்.

34758 total views