சாதாரண மளிகை கடையில் வேலை செய்த அணில் சேமியா நிறுவனர்.. இப்போது ஆண்டு வருமானம் மட்டும் எவ்வளவு தெரியுமா?

Report
235Shares

திண்டுக்கல்லில் உள்ள அணில் சேமியா நிறுவனம், சேமியா தயாரிப்பில் முன்னணியில் இருக்கிறது. இதுவரை டாப் அணில் மார்க்கெட்டிங்கில் இருந்து வந்த இந்நிறுவனம், தற்போது புதுப்பொலிவுடன் புதுச்சுவையுடன், அணில் ஃபுட்ஸ்என, கம்பு, வரகு, தினை, சோளம் போன்ற சேமியாவை குழந்தைகளை கவரும் சுவையில் அறிமுகம் செய்துள்ளது.

சாதாரணமாக இரண்டு மிஷின்களை வைத்துக்கொண்டு குறைந்த முதலீட்டில் ஆரம்பித்த இந்நிறுவனம் தற்போது உயர்ந்து நிற்கிறது.

மளிகை கடையில் வேலை பார்த்து வந்த நாகராஜ், சேமியா நிறுவனத்தைதொடங்கியபோது ஜீபிடர் என்ற பெயரில் ஆரம்பித்தார். ஆனால் ஜீபிடர் சரிவுகளை சந்திக்க, அதன் பின்னர் 1984-ம் ஆண்டு அணில் சேமியா என பெயர் மாற்றம் செய்யப்பட்டு புதிய நிறுவனத்தையும் தொடங்கினார்.

தற்போது இந்த நிறுவனத்தை அவரது மகன்களான சுகுமாரும், கமல்ஹாசனும் கவனித்து வருகின்றனர். இவர்கள் தங்களது அப்பா ஆரம்பித்த நிறுவனத்தில் மேலும் பல புதுமைகளைப் புகுத்தி, வியாபாரத்தை மேலும் விரிவு படுத்தி ப்ராண்டாக வளர்த்து வருகின்றனர்.

வருமானம்

மிகச்சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட அணில் சேமியா நிறுவனத்தில் தற்போது 1300 பேர் வேலை பார்த்து வருகின்றனர். அணில் சேமியா, ராகி சேமியா உள்பட 25 பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் மூலம் கடந்தாண்டு ரூ. 220 கோடி விற்று முதல் ஈட்டியுள்ளனர்.

இதுகுறித்து மகன் சுகுமாறன் கூறுகையில், ஆரம்பத்தில் சேமியா மற்றும் இனிப்பு வகைகளை மட்டுமே, பயன்பட்டு வந்த சேமியாவை, சிறியதாக்கி சேமியா உப்புமா என டிபன் வகைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினோம்.

இதனால் மக்கள் ஆர்வமாக வாங்க ஆரம்பித்தார்கள். இந்த வரவேற்பு எங்களை அடுத்த கட்டத்திற்கு நோக்கி சென்றது. தொடர்ந்து மக்களின் தேவை என்ன என்பதை ஆய்வு செய்து அந்தப் பொருட்களை சந்தையில் அறிமுகப் படுத்தத் தொடங்கினோம்,

அணில் சேமியா நிறுவனத்தினர். பின்னர் ரேடியோ விளம்பரம் அணில் சேமியாவை இன்னும் மக்களுக்கு நெருக்கமாக்கியுள்ளது.

அப்பாவின் உழைப்பு

பலசரக்கு கடையில் வேலை பார்த்து வந்த எங்கள் அப்பா, ஆரம்பத்தில் சேமியா விற்பனையைத் தொடங்கியபோது பல்வேறு கசப்பான சம்பவங்களைக் கடந்து தான், பல பாடங்களைக் கற்றார். பத்தாவது பெயிலான அவருக்கு வாழ்க்கைப் பல தேர்வுகள் வைத்தது.

அவற்றையெல்லாம் சமாளித்து தோல்விகளில் இருந்து பாடம் கற்றதுபோல் படிப்படியாக முன்னேறி இந்நிறுவனைத்தை தொடங்கினார்.

அவரது கடின உழைப்பின் பலனாக தற்போது தமிழகம் மட்டுமின்றி கர்நாடகாவிலும் எங்கள் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது, என்கிறார் சுகுமாறன்.

இம்மதத்தில், அணில் சேமியா நிறுவனம், கம்பு, வரகு, தினை, சோளம், கோதுமை போன்றவற்றை மூலப்பொருட்களாக்கி புதிய சேமியா வகைகளை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

குறைந்த காலகட்டத்திலேயே தங்களது பொருட்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் அணில் சேமியா நிறுவனம் மகிழ்ச்சி அடைந்துள்ளது.

தற்போது நடிகர் விஜய் சேதுபதி அணில் சேமியா நிறுவனத்தின் விளம்பரத்தூதராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இன்னும் சில மாதங்களில் மேலும் பல புதிய உணவுப் பொருட்களை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

8246 total views