தினமும் விமானத்தில் பறக்கும் தமிழக இட்லி!.... லட்சங்களில் விற்பனை

Report
462Shares

என்ன தான் பாஸ்ட்புட் வந்தாலும், தமிழர்களின் பாரம்பரிய உணவான இட்லிக்கு என்றுமே மவுசு குறையாது.

ஆவி பறக்க இட்லியை சட்னி, சாம்பாருடன் ருசிப்பது என்பதே அலாதி சுவை தான்.

6 மாத குழந்தை முதல் 60 வயது மூதாட்டி வரை எளிதில் செரிமானம் ஆகும் இட்லியை சுவைக்கலாம்.

உடல்நிலை சரியில்லாமல் போனாலும் மருத்துவர்கள் பரிந்துரைப்பது இட்லியைத்தான், இப்படி பல்வேறு தனிச்சிறப்புகள் கொண்ட இட்லிக்கென்று சந்தை இருப்பது உங்களுக்கு தெரியுமா?

ஆம், ஈரோட்டின் கருங்கல்பாளையத்தில் சத்தமில்லாமல் இயங்கி பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது பாரம்பரிய இட்லி சந்தை.

தினமும் அதிகாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 11 மணிவரை செயல்படும் இந்த இட்லி சந்தையில், தினந்தோறும் 20 ஆயிரம் இட்லிகள் விற்பனை ஆகிறதாம்.

விசேஷமான நாட்கள் என்றால் ஒரு லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறதாம், தொடக்கத்தில் 50 பைசாவில் தொடங்கிய வியாபாரம் தற்போது ரூ.6ல் வந்து நிற்கிறது.

ரவா இட்லி, நெய் இட்லி, காஞ்சிபுரம் இட்லி, மினி இட்லி என பல ரகங்களிலும், பல சுவையான சட்னிகளுடன் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகம் மட்டுமின்றி, மலேசியாவில் நடந்த உலகத் தமிழர் மாநாட்டுக்கு கூட இங்கிருந்து தான் இட்லி ஏற்றுமதி செய்யப்பட்டதாம்.

இதுமட்டுமா டெல்லி, பெங்களூரு போன்ற இந்திய நகரங்களுக்கும் தினமும் விமானத்தில் அனுப்பப்படுகிறதாம்.

எந்தவித இயந்திரங்களும் இன்றி, கைகளால் மாவரைத்து விறகு அடுப்பில் தயாராகும் இந்த இட்லிக்கு வெளிநாட்டவர்களும் சொக்கி போனார்கள் என்றால் அது மிகையாகாது!!!

loading...