சின்னத்திரையில் இருந்து பெரியதிரைக்கு சென்று மீண்டும் சின்னத்திரையில் கலக்கியவர் நடிகை சந்தோஷி.
ரஜினியின் பாபா படத்தில் அறிமுகமாகி வீராப்பு, மிலிட்டரி என பல படங்களில் நடித்தார்.
தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் படங்களிலும் நடித்து வந்தவர், சின்னத்திரை பக்கம் தாவினார்.
அரசி, இளவரசி என பல தொடர்களில் நடித்து டாப்பில் இருந்த போதே, நாடக நடிகரான ஸ்ரீகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
தொடர்ந்து சினிமாவில் இருந்து ஒதுங்கியவர், 6 ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் சேர்ந்து பிளஸ் என்ற பொட்டிக்கை தொடங்கினார்.
மணமகள்களுக்கான நகைகள், ஆடைகள் என பிரத்யேகமாக தயாரிக்கப்படும் இந்த ஷோரூமுக்கு ஆர்டர்களும் குவியத் தொடங்கின.
இந்நிலையில் தற்போது அழகுக்கலை குறித்து வகுப்புகளையும் எடுத்து வந்த சந்தோஷி, முழுதாக பிஸினசில் கவனம் செலுத்தி வருகிறாராம்.
சமீபத்தில் கூட இவர் நடத்திய அழகுக்கலை கருத்தரங்கில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்ஷமி தேவதையாய் ஜொலித்தார்.
இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஆண் குழந்தை இருக்கும் நிலையில், சமீபத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது குறிப்பிடத்தக்கது.