நீதா அம்பானி குடிக்கும் சிங்கிள் டீ-யின் விலை தெரியுமா? ஷாக் ஆகிடாதீங்க

Report
1005Shares

ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி பெரிய டீ பிரியர் ஆவார். இவர் காலையில் குடிக்கும் ஒரு கப் டீயின் விலை 3 லட்சம் ஆகும். மேலும் இவர் டீ குடிப்பதற்காக செய்திருக்கும் அலங்கார விஷயங்கள் அனைத்தும் மலைப்பை தருகின்றன.

இந்தியாவின் முக்கிய பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் அனைத்தும் ஜியோவின் வருகைக்கு பின் டாப்பில் இருக்கின்றன. இந்த நிலையில் நீதா அம்பானி செய்யும் சில ஆடம்பர செலவுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

இவர் டீ குடிப்பதற்காக ஜப்பான் கலைஞர்களால் செய்யப்பட்ட டீ கப்களை வாங்கி இருக்கிறார். இதில் ஒரு டீ கப்பின் விலை மட்டும் 1.5 லட்சம் ஆகும். அந்த நாட்டில் கிடைக்கும் டீ கப் ரகங்களிலேயே இது மிகவும் விலை அதிகமான கப் ஆகும்.

அதே போல் இவர் டீ வைத்து குடிப்பதற்கான டேபிள் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. முழுக்க முழுக்க தங்கம் கொண்டு செய்யப்பட்ட இது சீனா கலைஞர்களால் உருவாக்கப்பட்டது. இதில் பிளாட்டினத்தால் முலாம் பூசப்பட்டு இருக்கும்.

மேலும் இவர் குடிக்கும் டீ தினமும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஒரு கப் டீயின் விலை 3 லட்சம் ஆகும். இதுதான் இந்தியாவில் கிடைப்பதிலேயே மிகவும் விலை அதிகமான டீ ஆகும்.

40858 total views