இறப்பதற்கு முன்பு கண்கலங்கிய ராஜகோபால்! மருத்துவமனையில் நடந்தது என்ன?

Report
1446Shares

பெண்ணாசை, பேராசை போன்றவையால் கடைசியில் படுக்கை படுக்கையாக கிடந்த சரவணபவன் ராஜாகோபாலின் தன்னுடைய இறுதி நிமிடத்தில் கண்ணீர் வடித்து அழுதுள்ளார்.

தற்போது தமிழ் ஊடகங்களில் பெரிய அளவில் பேசப்பட்டு வரும் செய்தியாக சரவணபவன் ராஜகோபால் இருக்கிறார். ஜீவஜோதி என்ற பெண்ணின் மீது பட்ட ஆசையும், அவை திருமணம் செய்து கொண்டால் கோடி கோடியாக சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்த இவர் தன்னுடைய கடைசி காலகட்டத்தில் படுக்கை படுக்கையாக கிடந்ததற்கு முக்கிய காரணம் அவரின் மன அழுத்தம் தான்.

ஏனெனில் அவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை தன்னுடைய ஹோட்டல்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு, போனஸ், உடை, பி.எப் என்று கொடுத்து வந்தார். ஆனால் அதன் பின் ஜீவஜோதி பிரச்சனை, அமெரிக்காவில் தமிழகத்தை சேர்ந்த சமையல்காரர்களை சுற்றுலா விசாவில் அழைத்துச் சென்று, அதன் பின் சிக்கிக் கொண்டது என குமுறுக் கொண்டிருந்தார்.

அதுமட்டுமின்றி இவருடைய இரண்டாவது மனைவியின் டார்ச்சர், மகன்களுக்கு சொத்தை பிரித்து கொடுப்பது, அவர்கள் தன்னைப் போன்று தொழிலில் அந்தளவிற்கு வேகம் இல்லையே என்ற ஏக்கத்திலும் இருந்துள்ளார்.

அதன் பின் ஜீவஜோதி வழக்கின் போது, அவருடன் இருந்த அதிகாரிகள் நாங்கள் நிச்சயமாக உங்களை வெளியே எடுத்துவிடுவோம் என்று கூறி, கூறி கடைசியில் அவரை ஆயுள் தண்டனை கைதியாக மாற்றியது போன்றவைகளே அவரை படுக்கைபடுக்கையாக மாற்றிவிட்டது.

உச்சநீதிமன்றம் அவரை ஆயுள்தண்டனை கைதி என்று தீர்ப்பளித்தவுடன், உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு எவ்வளவு சிகிச்சை கொடுத்தும், பலனிக்காததால், அவர் உடனடியாக வேறொரு உயர்தர மருத்துவமனைக்கு மாற்றப்பட அங்கும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவர் உயிரிழப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் அங்கிருந்தவர்களை கண்டு கண்கலங்கியுள்ளார். அவர் கண்கலங்கியது தான் செய்த தவறுகளுக்காகவே, என்னைப் போன்று ஜோதிடத்தை நம்பி ஏதேனும் திடீர் முடிவை எடுத்துவிடாதீர்கள் என்பதற்காகவா? என்பது தெரியாமலே போய்விட்டது.

மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜகோபாலுக்கு, நுரையீரலில் பிரச்சனை, சளிப் பிரச்சனை போன்றவை இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

39039 total views