இன்றைய காலத்தில் மனிதர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு சூழ்நிலைகள் நாளுக்கு நாள் அதிகமாகவே இருக்கின்றன.
இவ்வாறான விடயங்களை ஈழத்து கலைஞர்கள் மிகவும் சிறப்பான முறையில் காணொளியாக பார்வையாளர்களுக்கு எடுத்துச் செல்கின்றனர்.
பொதுவாக டீ கடை என்று சென்றாலே நமக்கு தெரியாத பல விடயங்களை அங்கே தெரிந்து கொண்டு வரலாம். காரணம் அங்கு பலரும் கூடி டீ அருந்துவது மட்டுமின்றி நாட்டு நடப்பினையும், மற்றவர்களின் பிரச்சினையையும் பழக்கம் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இங்கு விவசாயத்தினைப் பற்றி தெரியாத இளம்பெண் இன்று பல விடயங்களைக் கற்றுக்கொண்ட காணொளியே இதுவாகும். இன்றைய நவீன உலகில் விவசாயிகளை மதிப்பது என்பது பலருக்கும் தெரியாத விடயமாக இருந்து வருகின்றது.
விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் மட்டுமே நாம் சோற்றில் கால் வைக்க முடியும் என்பதை இன்றைய இளையதலைமுறையினர் நன்கு அறிந்துகொள்ள வேண்டும்.
அவ்வாறு விவசாயம் என்றால் என்ன என்பதை தெரியாமல் இருப்பவர்களுக்கு இக்காட்சி ஒரு சிறப்பான எடுத்துக்காட்டாகும்.