ஆரம்ப காலத்தில் தற்கொலை செய்துகொள்ள சென்ற லிவிங்ஸ்டன்.. உயிரை காப்பாற்றிய நடிகர்; காரணம் என்ன?
தமிழில் சொல்லாமலே, விரலுக்கு ஏத்த வீக்கம், உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும், பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்து பிரபலமானவர் நடிகர் லிவிங்ஸ்டன்.
இவர், சினிமாவில் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு காமெடி, ஹீரோ மற்றும் வில்லன் என அனைத்திலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் பல சீரியல்களில் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார். சினிமாவில் வெற்றி கண்ட லிவிங்ஸ்டன் ஒருகாலத்தில் சினிமாவில் வாய்ப்பு வராததால் தற்கொலை செய்வதற்கு முயற்சி செய்துள்ளார்.
அதம் பின்பு பாக்யராஜிடம் போய் சென்று தனது நிலைமை பற்றி கூறியுள்ளார். அதன் பிறகுதான் பாக்யராஜ் தனது படங்களிலும், படத்திலும் பணியாற்றுவதற்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.
பின்பு, லிவிங்ஸ்டன் வாழ்க்கையை மாறியதாக கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அதன் பிறகு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி தற்போது வரை பல படங்களில் சிறப்பாக நடித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.