பிரமாண்டமாக நடைப்பெற்ற பிக்பாஸ் கொண்டாட்டம்.. யாரெல்லாம் இருக்காங்கனு பாருங்க!

Report
0Shares

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலேவை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியின் ஷூட்டிங்கும் நடைபெற்றுள்ளது.

பிக்பாஸ் கொண்டாட்டத்தில் டைட்டில் வின்னர் ஆரி முதல் ஷிவானி நாராயணன் வரை அனைவரும் இருக்கும் அழகிய புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனிடையே, பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட சில போட்டோக்கள் வெளியாகி வைரலாகின.

பாலாஜி முருகதாஸ், ரம்யா பாண்டியன், சோமசேகர், சம்யுக்தா, ஆஜீத், கேபிரியல்லா என பாலாவின் குரூப் மற்றும் பாலாவின் நண்பர்கள் சூழ்ந்திருக்கும் அந்த புகைப்படம் வைரலானது.

மேலும், பிக் பாஸ் போட்டியாளர்கள் ஒட்டுமொத்த பேரும் கலந்து கொண்டு, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் அரங்கை அதிர வைத்துள்ள நிகழ்ச்சி கூடிய விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.

loading...