நடிகர் விஜய் குமார் குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வரும் இளம் வாரிசு நடிகர்? யார் தெரியுமா? ஒரே குஷியில் ரசிகர்கள்

Report
0Shares

மூத்த நடிகர் விஜய்குமார் அவர்களின் பேரனும் நடிகர் அருண் விஜய் அவர்களின் மகனுமாகிய அர்னவ், நடிகர் சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகிறார்.

இந்த செய்தி வெளியாகியதிலிருந்தே, ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இப்படத்தில் முதன்மை பாத்திரமான அர்னவிற்கு தந்தையாக அவரது தந்தை நடிகர் அருண் விஜய் நடிக்கிறார்.

குழந்தைகளின் உலகை மையமாக வைத்து உருவாகும், இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் நடிகர் அருண் விஜய் அவர்களின் 32 வது படமாகும்.

இப்படம் முழுக்க ஊட்டியில் படமாக்கப்படுகிறது சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் தயாரிக்கிறது. ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், RB Films யின் S.R.ரமேஷ் பாபு உடன் இணைந்து இணை தயாரிப்பு செய்கிறார்.

சரவ் சண்முகம் இப்படத்தை இயக்குகிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய நிவாஸ் K பிரசன்னா இசையமைக்கிறார். மேகா படத்தொகுப்பு செய்ய, தயாரிப்பு வடிவமைப்பை மைக்கேல் செய்கிறார். உடை வடிவமைப்பை வினோதினி பாண்டியன் மேற்கொள்கிறார்.

loading...