பிக்பாஸிலிருந்து வெளியே வந்த ஷிவானி வெளியிட்ட போட்டோஷுட்... இனி 4 மணிக்கு கிடையாது

Report
0Shares

பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷிவானி தற்போது தனது முதல் புகைப்பட ஷுட்டை வெளியிட்டுள்ளார்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்ட நேரத்தில் கவர்ச்சியாக புகைப்படம் ஒன்றினை பதிவிட்டு வந்தார். இதற்காகவே இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றது.

20 லட்சம் பேர் பின்தொடந்து வருகின்றனர். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவரது விளையாட்டு பலருக்கும் ஏமாற்றத்தினை அளித்தது.

ஷிவானிக்கு சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் குவிந்ததற்கு காரணம் அவருடைய 4 மணி புகைப்படங்கள் தான். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிக் தனது கவர்ச்சியான புகைப்படங்களை எல்லாம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார் ஷிவானி.

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் முதன் முறையாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் ஷிவானி. தொடர்ந்து இரண்டு நாட்களாக ஷிவானி 6 மணி அளவில் சில புகைப்படங்களை பதிவிட்ட அவர் இன்று காலை 9 மணியளவில் பதிவிட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் மீண்டும் குறிப்பிட்ட நேரத்தில் புகைப்படங்களை ஷிவானி பதிவிட துவங்கிவிட்டார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

loading...